ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
கர்மமும்!
ஞானமும்!
======================
ஆதியில் அந்த சத் ஒன்று மட்டுமே
இருந்தது. அது தனித்து இருந்துகொண்டு, தன்னிடமிருந்தே இந்த அனைத்தையும் படைத்தது.
இருண்ட உலகம், அடர்ந்த காடுகள்,
நீர் நிலைகள், அதன் மத்தியிலே ஆங்காங்கே அனேக ஜந்துக்கள் காணப்பட்டன. ஒரு நாள் பெய்த
மழையில் பல காளான்கள் முளைப்பது போன்று, திடிரென்று ஒரு மாலைப்பொழுதில் இலட்சக்கணக்கான
ஈசல் பூச்சிகள் பூமிக்கு அடியில் இருந்து உயிர் பெற்று வெளிவருகின்றதைப் போன்று, பஞ்ச
பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் சேர்க்கையினால் உயிர்கள்
உடல் எடுத்து தோன்ற ஆரம்பித்தன.
அந்த உடல்களினால் வெளிவந்த உயிர்களிலேயே
சிறப்பான உயிரினமாக மனிதன் காணப்பட்டான்.
ஒரு பொருளைப் படைக்கின்ற ஆற்றலும்,
பேரறிவும் கொண்டவன், அந்தப் பொருளை நுகர்கின்ற நுகர்வோர்கள் அதைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தால்
மட்டுமே அதைச் சரியாக கையாள முடியும். இல்லையேல், அந்தப் பொருளை எப்படி கையாளுவது அல்லது
பயன்படுத்துவது என்ற அறிவு இன்றி அதைக் கெடுத்து விடுவார்கள்.
அதனால், அந்தப் பொருளைத் தயாரித்த
நிறுவனமே, அந்தப் பொருளை பெற்ற நுகர்வோர் அதை எப்படிக்கையாள வேண்டும் என்பதை, அறிவிக்கும்
ஒரு அறிவுப்புத்தகமாக அந்தப் பொருளுடனேயே “கையாளும் கையேடு” (Operating
Manual)
என்ற ஒரு புத்தகத்தை இணைத்திருக்கும்.
அந்த பொருளை நுகர்ந்தவன் அந்த
கையேட்டினைப் படித்து, அதில் கூறப்பட்ட விளக்கங்களை அறிந்துக் கொண்டு, அந்த பொருளை
பயன்படுத்தினான் என்றால், அந்தப் பொருள் நன்றாகச் செயல்படும். நீண்ட நாட்களும் உழைக்கும்.
இந்தப்பாணியை, எல்லாம் வல்ல
அந்த சத்திய வஸ்து, அன்றே இந்த உலகைப்படைக்கும் பொழுதே, உலகத்தைக் கையாளும் கையேடாக
“வேதம்” என்ற
புத்தகத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.
ஓம் தத் சத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக