சிதம்பர ரகசியம்
===========
முன்னுரை
உண்மை இருக்கும் இடத்தில்
உற்சாகம் இருக்கும். உற்சாகம் இருக்கும் இடத்தில் உயர் அறிவு பிரகாசிக்கும். இந்த உண்மை,
உற்சாகம், மற்றும் உயர் அறிவு என இந்த மூன்றும் இணைந்து இருக்கின்ற இடமே இறைவனை அறிகின்ற
உன்னதமான இடம்.
இவ்வாறு இந்த மூன்றும்
குடி கொண்டுள்ள உன்னதமான ஒரே இடம் இந்த மனித தேகம் (உடல்) என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட இந்த மனித
உடலினுள்ளே வெட்ட வெளியில் சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற (“சித் என்றால் அறிவு”, “அம்பரம் என்றால் ஆகாசம்”) சித் + அம்பரம் - சிதம்பரத்தில், அதாவது, சிதாகாசத்தில் ஆனந்த
தாண்டவம் புரிகின்ற சிவமாக ஸ்ரீ நடராஜனின் திவ்யமான இருப்பிடம் இந்த மனித தேகத்தில்
உள்ள ஹ்ருதயம் ஆகும்.
(ஹ்ருதயம்: ஹ்ருதி - இதயத்திற்குள் + அயம் - வீற்றிருப்பவன்)
பிரபஞ்சமாகிய
இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் அந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் ஒருவன் வாழ்வது எங்கே?
இப்படி, மனித தேகத்தில் உள்ள ஹ்ருதயத்தில் இறைவனின் ஆடல் மகத்துவத்தை அறிகின்ற ஆற்றல்
ஞானிகளுக்கு மட்டுமே உண்டு. அவன் ஆடுவது ஆனந்தத் தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப்படுகிறது.
சிதம்பரம் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை சிற்பத்தின் வலது பக்கமாக பார்த்தோமானால்,
அங்கு ஒரு திரை தொங்க விடப்பட்டிருக்கும். அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத்
தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும்
புனிதமும் கூட.
இறைவனின்
உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது, உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப
தத்துவத்தையும், எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதையும் இங்கு
ரகசியமாகக்கூறப்படுகின்றது.
ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தாலும், பார்ப்பதற்கு உருவம் இருப்பதைப் போல் இருக்கின்றதோ, அதுப்போல, இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. ஆனால், பார்ப்பதற்கு உருவம் இருப்பது போன்று உள்ளது. பரம்பொருள் எல்லையற்று பரந்து விரிந்து காணப்படுகின்றது என்பதினால், அதை ஆதியில் வாழ்ந்த மக்கள் உருவகப்படுத்தி வழிபாடு செய்யவில்லை. அதுவே, நாளடைவில், சாதாரண மனிதனுக்கு இறைவனை வெட்டவெளியில் வெளிப்புறத்தில் காட்டமுடியாது என்பதினால், ஒரு உருவத்தில் வடித்துக் கொடுத்து, அவனுடைய திருப்திக்காக வழிபட ஏற்பட்டதுதான் இந்த உருவ வழிபாடு.
ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தாலும், பார்ப்பதற்கு உருவம் இருப்பதைப் போல் இருக்கின்றதோ, அதுப்போல, இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. ஆனால், பார்ப்பதற்கு உருவம் இருப்பது போன்று உள்ளது. பரம்பொருள் எல்லையற்று பரந்து விரிந்து காணப்படுகின்றது என்பதினால், அதை ஆதியில் வாழ்ந்த மக்கள் உருவகப்படுத்தி வழிபாடு செய்யவில்லை. அதுவே, நாளடைவில், சாதாரண மனிதனுக்கு இறைவனை வெட்டவெளியில் வெளிப்புறத்தில் காட்டமுடியாது என்பதினால், ஒரு உருவத்தில் வடித்துக் கொடுத்து, அவனுடைய திருப்திக்காக வழிபட ஏற்பட்டதுதான் இந்த உருவ வழிபாடு.
காலப்
போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு.
அருவ
வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். அதாவது, உருவமற்ற, குணங்களற்ற வெட்டவெளியை வழிபடுவது.
இது எல்லோராலும் முடியாதது. சராசரி மனிதனால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத ஒன்று.
காரணம், கடவுளை அறிவினால் விசாரித்து அறிந்து, மனம், உடல், உலகம் இவைகளைக் கடந்து தன்னுள்ளே
உள்ள ஹ்ருதயத்தில் அந்தத் தலைவனை அறிந்து, அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும்
முடியாது.
யோகிகளும்,
ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் உள்ளத்தையே இந்த ஆகாயமாக நினைத்துக்
கொண்டு, அங்கே உள்ள ஹ்ருதயத்தில் தாமரைப்பூவில் இறைவனை ஏற்றிவைத்து, சிவமாக தன்னுள்ளே
வழிபட்டு, அந்த பரிபூரண இறை சக்தியைக் வெளிக்கொண்டு வந்து பேரானந்த பெரு நிலையை எட்டுவதுதான்
அவர்களின் உண்மையான இலக்கு ஆகும்.
தங்கள்
தவத்தாலும், தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிபாடுகளிலேயே
மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் எளிதாக முடியாத ஒன்று.
ஆனால், ஒருவனிடம் ஒரு உருவத்தைக்
காட்டி, இதுபோன்றுதான் இறைவன் இருப்பான் என்று அவனுக்கு அவனது உடலின் தத்துவங்களை ஆலயமாக
அமைத்து, அதன் கர்பகிருஹத்தில் சிவத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் ஒரு வழிமுறைதான்
இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. இவ்வாறு அகத்தில் உள்ள சிவத்தை புறத்தில் வழிபடுவதை
சிதம்பர ரகசியமாக கோயில் அமைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக