ஞாயிறு, 30 ஜூன், 2019

விவேக சூடாமணி


விவேக சூடாமணி
============





ஓர் அறிமுகம்:- 
=============

விவேகசூடாமணி  அத்வைத  வேதாந்தத்தை நிலை நிறுத்திய  ஆதிசங்கரரால், கி.பி., 8 - ஆம் நூற்றாண்டில்  சமஸ்கிருத மொழியில்  எழுதப்பட்டது.  இது அத்வைத வேதாந்த தத்துவத்தை விளக்க வந்த நூலாகும். இந்நூலில் அத்வைத வேதாந்த தத்துவங்களை  எளிதாக விளக்குவதால் இதனை பிரகரண கிரந்தம் என்று வடமொழியில் அழைப்பர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருளின் மெய்ப் பொருளை ஆராய்ந்தறியும் அறிவானது விவேகம் எனப்படும். தலையில் அணியும் இரத்தினம் சூடாமணி, இது எல்லா நகைகளிலும் சிறந்தது. அது போல விவேகத்தைப் புகட்டும் (உண்மை அறிவை கொடுக்கும்) நூல்களுல் இந்நூல் தலை சிறந்ததாய் விளங்குவதால் இதற்கு விவேகசூடாமணி எனும் பெயர் பொருந்துவதாயிற்று.

சங்கரர் இந்நூலை, தனது இஷ்ட தெய்வமான  கோவிந்தனையும்  மேலும் தனது குருவான கோவிந்த பகவத் பாதரையும் வழிபட்டு பிரகரண கிரந்தங்களில் முதல் நூலாக துவக்குவதாக அமைந்துள்ளது.

விவேகசூடாமணி நூல் 580 சுலோகங்களுடன் கூடியது. இந்த தொகுப்பு நூலில் விலை மதிப்பற்றதாக சிதறிக் கிடக்கும் பல நவ ரத்தினக் கற்களில் கைக்கு கிடைத்த சில கற்களை மட்டும் எடுத்து மாலையாக கோர்ப்பது போன்று, இந்த புத்தகத்தில் ஆதிசங்கரரின் ஆத்ம தத்துவத்தில் சில செயுள்களை மட்டும் தொகுத்து 101 சுலோகங்களாக எடுத்து மாலையாக கோர்த்து படிக்கின்றவர்களுக்கு அறிவு மாலையாக அணிவித்து மகிழ்கின்றோம்.

      இந்த நூலை படிப்படியாக அறிந்துய்வதற்கு வழியினை பல எடுத்துக்காட்டுகளுடன் ஒரு சீடனுக்கும் குருவானவர்  போதிக்கும் பாணியில் உரையாடல்களாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 

குருவானவர் ஒரு சீடனை படிப்படியாக பிரம்மத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழி முறைகளை விளக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்