சனி, 29 ஜூன், 2019

பக்தி


பக்தி
என்னுரை
=======

ஒருவன் பயணத்தை மேற்கொள்ள முதலில் அடைய வேண்டிய  இலக்கை  நிர்ணயிக்கவேண்டும்.  இலக்கு நிர்ணயித்து முடித்தவுடன், அதற்கான சரியானப்பாதையைத்  தேந்தெடுக்க வேண்டும். 

அப்பொழுதுதான் அவன் அந்த சரியான பாதையில், சரியான காலத்தில், சரியான இலக்கை அடையமுடியும்.

அதுவே, அவன் நிர்ணயித்த இலக்கு சரியாக இருந்து, பாதை தவறாக இருந்தால், அவன் சுற்றுப்பாதையில் சுற்றித்திரிந்து அந்த இலக்கை அடைய  காலதாமதம் 
ஏற்பட்டு, அந்த இலக்கை அடையமுடியாமல், பயணம்  பயனற்றுப்  போக வாய்ப்பு 
உள்ளது.

அவன் பாதையைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, சென்றடைய வேண்டிய இலக்கைச் சரியாகத் தேர்ந்தெடுக்க தவறினாலும், அவன் நினைத்த இந்தப்பயணம் பலன் 
இல்லாமல் போய்விடும்.

அதுபோல, ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியில் பயணம் செய்துக்கொண்டு இருக்கின்றான். ஆனால், தான் மேற்கொண்ட இந்தப் பயணம் எதற்காக என்பதையும், பயணத்தின் முடிவு என்ன என்பதையும் அறியாமலேயே பெரும்பாலான மனிதர்கள் பயணித்துக்கொண்டுள்ளனர்.

எவனொருவன் இந்த மகத்தான மனிதப் பிறவியின் மகத்துவம் தெரிந்துக் கொண்டு, தான் மேற்கொண்டுள்ள பயணத்தின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொண்டு, இனியாவது பயணத்தைச் சரியாகத் தொடர நினைத்தான் என்றால்,  அவனது இலக்கு இறை()வனைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

இறைவனை இலக்காக அடையும் இலட்சிய பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன், அதற்கான பாதையைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இறைவனை அடையும் பாதைகள் பல இருந்தாலும், அதில் சரியான பாதையை அறிந்து கொள்வதில்தான், அவனது பயணம் பயனுடையதாக முடியும்.

இதை எவன் ஒருவன் புரிந்துக் கொண்டு, தவறான இலக்கை அடைய, தவறான பாதையில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, சரியான இலக்கையும், சரியான பாதையையும் அறிகின்றானோ, அவனே ஆறாவது அறிவின் அவசியத்தை அறிந்த அறிவுடையவன் ஆகின்றான்.

உண்மை அறிவை அறிய விரும்பும் ஒருவன் சாஸ்திரம் என்ற வரைபடத்தின் 
துணைக்கொண்டுபக்தி என்ற சரியான பாதையை தேர்ந்தெடுத்துஇறைவன் என்ற இலக்கை அடைய “ஆத்மகுரு என்ற வழிகாட்டியுடன்  பயணத்தை 
மேற்கொண்டால், அவனே அந்த பயணத்தின் முழுப் பலனையும் அடைந்து பிறவாமை என்ற பெரு நிலையை அடைகின்றான்.

அப்படிப்பட்ட அந்தப்பெரு நிலையை அடைகின்ற சரியானப் பாதையை இந்தப் பக்தி” என்ற நூல் வழிகாட்டப் போகின்றது.


ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்