புதன், 27 டிசம்பர், 2023
செவ்வாய், 26 டிசம்பர், 2023
திங்கள், 25 டிசம்பர், 2023
ஞாயிறு, 24 டிசம்பர், 2023
வியாழன், 7 டிசம்பர், 2023
புதன், 29 நவம்பர், 2023
பதஞ்சலி யோக சூத்திரம் - சமாதி பாதம் [வகுப்பு - 21] பகுதி - 2
நாம் மனதை எண்ணங்கள் இல்லாமல் எப்படி தடுப்பது?
அதற்காகத்தான்
அந்த மனதின்
துவக்கப்புள்ளியை நாம் அறிய வேண்டும்.
அதை எப்படி அறிவது என்றால், பொதுவாக, புலன்களால் உணரப்படும் இவ்வுலகில், நாம் பெற்றிடும் அனுபவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிர்மாறான ஜோடிகளால் நிர்வகிக்கப் படுகின்றன.
அனைத்துமே ஜோடிகளாய் உள்ளன.
நல்லது – கெட்டது,
வெளிச்சம் – இருட்டு,
அறியாமை எனும் அக்ஞானம் – அறிவு எனும் ஞானம்.
பிறப்பு – இறப்பு,
விருப்பு – வெறுப்பு,
பகல் –இரவு,
நல்லொழுக்கம் – தீய ஒழுக்கம்,
எண்ணுதல் – மறத்தல் என்று இத்தகைய பட்டியலை மேன்மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கோர் முடிவென்பதில்லை.
ஏன்?
இவ்வுலகமோ வெறுமே புலன்களால் உணரப்படுவது (அ) சார்புடையது.
நாமோ கால-தேசம். அதாவது, நேரம் – இடம் ஆகிய வரையறைகளுக்குட்பட்ட உயிரினங்கள்.
நமக்கு வரையறையற்ற நிலை என்றால், என்னவென்றே தெரியாது.
ஆனால், நாம் தேடும் இறைவன், முக்தி, ஆன்ம விடுதலை, அறுதியுண்மை, சித் எனப்படும் தூய உணர்வு ஆகியவைகளெல்லாம் எவ்விதமான வரையறைகளுமற்ற நிலைகள்.
துவந்தங்கள் எனப்படும் மேற்கண்ட எதிர்மாறான ஜோடிகள் இவைகளில் கிடையாது.
அந்த ஆன்மாவை (அறிவை) அவைகள் நெருங்கவும் முடியாது.
இதிலே, நாம் அறிவு பெறுதல் இருவகைகளில் நிகழ்கின்றது.
செயல்முறை மூலம் பெறும் அறிவு – இது புலனறிவு.
புலனறிவு என்பது, புலன்களின் மூலம் பெறப்படும் அறிவு.
இது தொடர்புள்ள அல்லது தனக்கு நேரடியில்லாத அறிவு.
அடுத்து, “அதுவாயிருந்து அறியும் அறிவு – இது ‘சுய-உணர்வு’ அல்லது உள்ளுணர்வு
இது, உடனடி அல்லது தனக்கு நேரடியான அறிவு.
அதிலே, புலனறிவு என்பது புலன்கள், மனது மற்றும் புத்தியின் மூலம் பெறப்பெற்ற அறிவு. இத்தகைய அறிவு ஒரு செயல்முறை மூலம் பெறப்படுகிறது.
இதில், சாதகனின் அறியும் தத்துவமான மனம் அல்லது சீவாத்மா அல்லது விழிப்புணர்வு, புலன்கள், மனம், புத்தி ஆகியவைகளைக் கருவிகளாக்கி, அறிவைப் பெறுகிறது.
அதுவே, அந்த வரையறையற்ற பேருணர்வு (மொத்த உணர்வு) இந்தக் கருவிகளுடன் தொடர்பு வைக்கும்போது, அவைகளோடு ஈடுபட்டு, ஒரு வரையறைக்குள் சிக்கிக் கொண்டதுப் போன்று காணப்படுகின்றது.
அதன்பின், அது தன்னை (சொரூபத்தை) மறந்து, வெளிப் பொருள்களை அறியத் தொடங்குகிறது.
அவ்வாறு அது அறிவது ஒரு செயல்முறை மூலம்.
இப்படியாகத் தன்னை ஒரு வரையறைக்கு உட்படுத்திக் கொண்ட உணர்வு (ஜீவாத்மா), மனதின் மூலம் வெளிச்செல்லத் தொடங்கும்போது, மனம் செயல்பட்டு, எண்ணத்தொடங்குகிறது. அதாவது சிந்திப்பதென்பது நடைபெறுகிறது.
அது மேலும் வெளிச் செல்லும்போது, உலகுடன் தொடர்பு கொள்ள உதவும் புலன்கள் மற்றும் மற்ற அவயவங்களை செயல்படுத்தி, பேச்சு மற்றும் செயல்கள் மூலம் உலகுடன் தொடர்புகொள்கிறது.
இவ்வாறாக, உணர்வு வெளிப்பட்டு, மனது, புலன்கள் மற்றும் உடல் மூலம் வெளி உலகுடன் தொடர்புகொண்டு, உலகத்தைப்பற்றிய அறிவைப்பெருகிறது.
இப்படிப்பட்ட அறிவுதான் நமக்குத் தெரியும், இது புலன்சார்ந்த அறிவு.
இவ்வகை அறிவில் மிக மிக உயர்ந்தது புத்தி என்பதாகும்.
அதாவது அறிவார்ந்த அறிவு.
புலன்கள் வெளி உலகைப் பற்றி நமக்கு அளித்த அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவு.
இத்தகைய அறிவு புத்தி அல்லது தொடர்பு அறிவு எனப்படுகின்றது.
ஆனால், இதனின்றும் வேறுபட்ட, முற்றிலும் வியப்பளிக்கிற, புதுவகையான ஒரு அறிவு உண்டு.
அது ஆத்மானுபூதியில், சமாதி நிலையில் தானே நிகழ்கிறது.
(உள்ளுணர்வாக பரிமளிக்கிறது).
இதுதான் புறத்தொடற்பற்ற அறிவு.
அதாவது, சிந்திக்காமல் சிந்தித்தல், தூங்காமல் தூங்குதல் போன்றவைகள் அந்த தூய உணர்வு நிலையில் உண்டாகக்கூடியவைகள்.
இவைகள் மிகவும் மர்மமானவை.
இந்த சுய-உணர்வு அல்லது தன்னுணர்வு (Self-Consciousness) வார்த்தைகளால் விவரிப்பதென்பது ஓர் இயலாத காரியமே!
ஏனெனில், அது ஓர் (புலனறிவுக்கெட்டாத அறிவுசார்) அநுபவம்.
(அதை ஒவ்வொருவரும் தன்னில் தானே அநுபவிப்பதன் மூலம் மட்டுமே உணரக் கூடிய ஒன்று).
இருந்தபோதிலும், நாள்தோறும் நாம் பெறும் ஒரு அநுபவத்தின் மூலம் இதை அறிவது சுலபமாயிருக்கும்.
எப்படி?
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...