மந்திர
ஜபத்தின் மகிமை
================
முன்னுரை
ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं
द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।
एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षिभूतं
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॥
ப்ரஹ்மானந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககனஸத்ருசம் தத்வமஸ்யாதிலக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||
பிரம்மானந்த ரூபியும் பரமசுகத்தையளிப்பவரும், ஞானமே வடிவாகியவரும்,
இரட்டைகளுக்கு அப்பாற்பட்டவரும், ஆகாயம் போன்றவரும், ‘தத்-த்வ-மஸி’ முதலிய மகா
வாக்கியங்களின் லக்ஷ்யமாகியவரும், ஒப்பற்றவரும், சாசுவதமானவரும், பரிசுத்தரும்,
அசையாதவரும், எல்லோருடைய புத்திக்கும் ஸாக்ஷியாய் விளங்குபவரும்,
மனதிற்கெட்டாதவரும் முக்குணங்களைக் கடந்தவருமாகிய ஸத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
- குருகீதை
இந்த
“மந்திர
ஜபத்தின் மகிமை” என்ற
நூலை அடியேன் எழுதவேண்டியதின் அவசியம் ஏன் உண்டானது என்றால், அனேக ஆன்மீக சாதகர்களும்
அவரவர்களுக்கு பிடித்த, விருப்பமான தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்து வருகின்றனர்.
ஒருவன்
தனக்கு கொடுக்கப்பட்ட இந்த ஒரே உடலில், பலவிதமான வேலைகளைச் செய்யுமாறு அமைக்கபட்டுள்ள
உடல் உறுப்புக்களில் இந்த உறுப்புக்களை நான் மிகவும் விரும்புகின்றேன். இந்த, உடல்
உறுப்புக்களை நான் வெறுக்கிறேன் என்று கூறுவது எப்படி அபத்தமாக இருக்குமோ, அதுபோல,
எங்கும், எதிலும், நீக்கமற நிறைந்துள்ள அந்த ஒரே பரப்பிரம்மத்தின் பலவிதமான சக்திகளாக
வெளிப்பட்ட பல தேவதைகளின் செயலைக் கண்டு, தனக்கு இந்த, தேவதைகளை மட்டும் விரும்புகின்றேன்,
இந்த, இந்த தேவதைகளை வெறுக்கின்றேன் என்று கூறுவதும் அவனது அறியாமையின் அபத்தம் என்றுதான்
கூறவேண்டும்.
இதில்
ஒரு சில சாதகர்கள் எதற்காக இறை நாமத்தை ஜபிக்கின்றோம் என்ற புரிதல் இன்றி ஜபம் செய்கின்றனர்.
அதுகூட பரவாயில்லை, அந்த அறியாத இறை நாம ஜபத்தினாலே கூட, ஜபிப்பவரின் மனம், அந்த நாமத்தின்
மகிமையினால் தூய்மையை நாளடைவில் அடைந்து விடும்.
ஆனால்,
ஒரு சிலர் அந்த மந்திரத்தின் பலனாக சித்த சுத்தி அடைவதற்குப் பதிலாக, அஷ்டமா சித்துக்கள்
கிடைக்க வேண்டும் என்றும், அந்த, அந்த மந்திரத்திற்கு உரிய தேவதையை நேரில் சந்திக்க
வேண்டும் என்றும், ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, மற்றவர்களுக்கு கேடுகளைச்
செய்யும் மாந்திரீக முறைகளை கற்று, மற்றவர்களை தொந்தரவு கொடுக்க வேண்டும் என்றும்,
இன்னும் சிலர் எந்த மந்திரத்தினைக் கொண்டு, இளம்பெண்களை வசியம் செய்யலாம் என்றும் கெட்ட
எண்ணத்தினாலேயே மந்திரங்களை ஜபிக்கின்றனர்.
இந்த
நூல் அவர்களது தவறான எண்ணங்களை மாற்றி, மந்திர ஜபத்தின் உண்மையான நோக்கம், எதுவாக இருக்கவேண்டும்
என்பதையும். இறை நாம ஜபத்தின் மகிமையையும், அதற்குத் தேவையான அறிவையும் வெளிச்சம் போட்டு
காட்டுகின்றது.
எந்த
ஒரு ஆன்மீக சாதகனும், சத்குருநாதரும், சாஸ்திர விசாரமும் இன்றி, அந்த ஜபத்தின் பலனாக
இறைவனை அறிய முடியாது என்பதையும், இந்த இரண்டையும், இரண்டு கண்களாக எவன் ஒருவன் பாவித்து,
சத்குருநாதரின் உபதேச மந்திரத்தை விடாமல் அனுதினமும், மனதினால், ஜபம் செய்து வருகின்றானோ,
அதன் அபரிமிதமான பலனாக, தனக்கு கிடைத்த இந்த மானிடப் பிறவியின் பெரும் பயனை இப்பிறவியிலேயே,
அடைந்து விட்டான் என்பதை ஆணித்தரமாக அறிவிக்க முடியும்.
காரணம்,
அந்த சாதகன் பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனாக, அவனுக்கு இந்த நூல் அறிய
பொக்கிஷமாக அவன் கையில் கிடைத்துள்ளது என்றால், அது மிகையாகாது.
இந்த
நூலின் வாயிலாக அந்த பரம்பொருளின் பரம பவித்ரமான சுவாஸத்தினை தன்னுடைய சுவாஸமாக அறிந்து
கொண்டு, அன்றைய ரிஷி முனிவர்கள் அடைந்த அந்த பேரானந்த பெருநிலையை தன்னுடைய அன்றாட சுவாஸத்தினாலேயே,
இவனும் அறிந்து, தன்னை அறியும், அற்புத மகாமந்திரத்தை இந்த நூலின் வாயிலாகவே அறிந்து
கொண்டு, அந்த பரப்பிரம்மத்தின் பரமானந்த பரவச நிலையை இவனும் அடைகின்றான்.
எனவே,
இந்த நூலைப் படிக்கின்ற சாதகர்கள் இந்த நூலை மிகவும் சிரத்தையாக படித்து, அந்த பவித்ரமான
மகா மந்திரத்தை அறிந்து, அதன் பலனாக பிறவிப்பெருங்கடலை கடக்கமுடியும்.
ஓம் தத் சத்!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக