அனைத்து
அறிவும் உங்களுக்குள்
तत्र निरतिशयं सर्वज्ञबीजम् ॥२५॥
தத்ர நிரதிஸயம்
சர்வக்ஞபீஜம் ॥25॥
tatra niratiśayaṁ
sarvajña-bījam ॥25॥
(அந்த எல்லையற்றது
எல்லாமறிந்த விதை)
இதுவரை, ஈஸ்வரனின் தன்மை பற்றி சிந்தித்தோம்.
மேலும், மனக் கிலேசங்களால் அந்த படைப்பு சக்தியானது பாதிக்கப்படுவது இல்லை என்று கண்டோம்.
பதஞ்சலி ஒரு மிகப் பெரிய உண்மையை இப்பொழுது கூற இருக்கின்றார்.
அதற்கு முன்னால் ஒரு சிறிய கதை.
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன், அந்த ஊரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்து வந்தான். வேறு எங்கும் போக மாட்டான். அந்த மரத்தடிதான் அவன் இருப்பிடம். அங்கேயே படுத்து தூங்குவான். அவன் சாமான்கள், கோணிப்பை எல்லாம் அந்த மரத்தின் அடியில் வைத்து இருப்பான்.
கொஞ்ச நாளில் அவன் வயதாகி இறந்து போனான். ஊர் மக்கள் கூடி, அவன் பல காலம் இருந்த அந்த மரத்தின் அடியிலேயே அவனை புதைத்து, ஒரு சின்ன சமாதி ஒன்று கட்டலாம் என்று முடிவு செய்தார்கள்.
புதைக்க குழி தோண்டிய போது, அந்தக் குழியில் ஒரு குடம் கிடைத்தது. அந்த குடம் நிறைய பொற்காசுகள் இருந்தது.
பெரிய புதையலின் மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் முழுவதும் பிச்சை எடுத்திருக்கிறானே என்று ஊர் மக்கள் அவனது நிலையைக் கண்டு பரிதாபமடைந்தனர்.
வெளியே நீட்டிய கையை கீழே நீட்டியிருந்தால் பத்து தலைமுறைக்கு வாழ புதையல் கிடைத்திருக்கும்.
அவன் அறியாமை புதையலின் மேல் அமர்ந்து கொண்டு பிச்சை எடுக்க வைத்தது.
அதுப்போல, நமக்குள் இருக்கும் அறிவின், ஞானத்தின் ஆற்றலை நாம் அறியாமல் இருக்கிறோம் என்கிறார் பதஞ்சலி.
அளவற்ற ஞானம் நமக்குள்தான் குவிந்து கிடக்கிறது.
அதை நாம் அறியாமல் ஞானத்தை வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம்.
நமக்குள் இருக்கும் அந்த படைப்பாற்றலில், அத்தனை அறிவின் மூலமும் அங்கேதான் இருக்கிறது.
இதை எப்படி நம்புவது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக