வெள்ளி, 31 மார்ச், 2023

உன்னை நீ அறிவாயா! [வகுப்பு - 15]




உன்னை நீ அறிவாயா!

[வகுப்பு - 15]

நான் என்பது என்ன?

 

இதுவரை என்னால் ஏற்றி வைத்துக் கொண்ட எண்ணங்களான எனக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள், நான் படித்த புத்தகங்கள், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரும் எனக்குள் திணித்த ஏராளமான செய்திகளின் தொகுப்பே இந்த நான் என்ற அகம்பாவம்.
 
அவர்கள் திணித்தவைகள் எல்லாம் சரி என்று சொல்ல முடியாது.
 
உதாரணமாக, நான் வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு கலாச்சாரத்தில், வேறு ஒரு குடும்பத்தில், அல்லது வேறு ஒரு மொழி பேசும் மாநிலத்தில் பிறந்திருந்தால், அந்த நான் என்ற அகம்பாவம் வேறொன்றாக இருந்திருக்கும்.
 
அதாவது, அந்த நான் இப்போது இருக்கும் இந்த நான் என்ற தற்போதைய இந்த வடிவத்திற்கு மாறாக, நிச்சயம் வேறு ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.
 
அதாவது, வெளியில் உள்ள மற்றவர்களால் திணிக்கப்பட்ட இந்த விசய - சுகங்கள் என்னை இப்படி ஒரு வடிவத்திற்கு உட்படுத்தி, அதுதான் “நான் என்று என்னை நம்ம வைக்கின்றன.
 
ஆக, நான் இந்த உலகை அறிவது, அதனோடு தொடர்பு கொள்வது, அதில் இருந்து வரும் செய்திகளுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டு, செயல்படுவது என்பது புற விசயங்களின் தொகுப்பால் உண்டாக்கப்பட்டுள்ளது.
 
அவைகள், உண்மையான நான் என்பதை அறிய தடையாக மாறி, அல்லது நான் யார்?’ என்று அறிய முடியாத அவல நிலைக்கு என்னை தள்ளி, இந்த போலியான ‘நான் என்பதில் என்னை சிக்க வைத்து, தனக்குத் தானே தடையாக இருக்கின்றது.
 
இந்த போலியான ‘நான்’ என்பது ஒரு கலர் கண் கண்ணாடி போன்றது.
 
சிலர் சிவப்பு நிறக் கண்ணாடி அணிந்துக் கொண்டிருப்பார்கள், சிலர் பச்சை நிறக் கண்ணாடி அணிந்துக் கொண்டிருப்பார்கள்.
 
அதனால், அவரவர்கள் அணிந்துக் கொண்ட கண்ணாடியின் நிறத்திற்கு ஏற்ப இந்த உலகம் அந்த நிறத்தில் காணப்படும்.
 
அதாவது, அந்தக் கண்ணாடியின் வாயிலாக பார்ப்பதன் மூலம் நாம் இந்த உலகை சிவப்பாகவோ அல்லது பச்சையாகவோ பார்க்கிறோம்.
 
ஆனால், உண்மை அப்படியா இருக்கின்றது?
 
அந்தக் கலர்க் கண்ணாடியக் கழற்றி வீசிவிட்டுப் பார்த்தால், உலகம் உள்ளது, உள்ளதுப் போலத் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
 
 ஆக, உண்மையான உலகை நாம் காண வேண்டும் என்றால், இதுப் போன்ற கலர் கண்ணாடி அணிவதை அவசியம் தவிக்க வேண்டும் இல்லையா?
 
அதுப்போல, உண்மையான நான்’ என்பதை அறிய, நம்மிடம் ஏற்றி வைக்கப்பட்ட இதுப்போன்ற பொய்யான ‘நான் என்பது நமக்குத் தடையாக மாறிவிடுகின்றது.
 
எனவேதான், இந்த போலியான நான் என்ற அகம்பாவத்தை நாம் விட வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்