சனி, 18 மார்ச், 2023

நாநா சீவவாதக் கட்டளை (பகுதி - 1)


இந்த நாநா சீவ வாதக் கட்டளை” என்ற நூலுக்கு பொருள், சீவர்களின் பலவாறான மலங்களை போக்கும் வேதியல் விளைவுக்கு உட்படுத்தும் வாதியாக இந்த சத்குரு இருந்து, தனது உபதேசத்தால் இந்த சீவர்கள் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட மலங்களை (மன அழுக்குகளை) நீக்கும் கட்டளை (உபதேசம்) என்பதாக இந்த நூல் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒரு வேதியானவன் செம்பு மீது உள்ள களிம்பை வேதித்து, அதன் உண்மை சொரூபமான தங்கம் போன்ற பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றானோ, அதுப் போன்று, இந்த சீவர்கள் மீது ஏற்றி வைத்துள்ள அனேக களிம்புகளான, கர்த்தா, போக்தா, ஞாதா என்ற பல்வாறான சீவ தத்துவங்களை தன் மீது ஏற்றி வைத்துக் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டி, அந்த பலவாறான சீவ தத்துவங்களிலிருந்து, அந்த சீவனை விடுவித்து, ஏக தத்துவமான அதுவாகவே நீ இருக்கின்றாய் என்ற ஆன்ம தத்துவத்தை உபதேசித்து, சீவனின் உண்மை சொரூபத்தை, சுயம் பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றார்.

அந்த வகையிலே, இந்த நாநா சீவ வாதக் கட்டளை” என்ற நூல், பலவாறான அறியாமைகளை ஏற்றி வைத்துக் கொண்டுள்ள சீவர்களை தன்னுடைய உபதேசக் கட்டளையினால், அவர்களுக்குள் இரசவாதத்தை ஏற்படுத்தி, வேதித்து, தன் உண்மை சொரூபத்தை வெளிக் கொண்டு வருகின்ற சாதனமாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்