ஆடியோ MP3 பதிவிறக்கம் செய்ய:-
-----------------------------------------------------------------
Audio MP3
உன்னை நீ அறிவாயா!
=====================
[வகுப்பு - 14]
^^^^^^^^^^^^^^^^
பிரமாணம் என்பது மூன்று வகைகளில் உள்ளது.
அவைகள்,
1. காட்சி பிரமாணம் அல்லது நேரடி அனுபவம்.
2. அனுமானப் பிரமாணம் (யூகம்)
3. ஆகமப் பிரமாணம் (சாஸ்திரம்)
எந்த ஒன்றை நாம் அறிவதாக இருப்பினும் இந்த மூன்றையும் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
அதாவது, நாம் ஒன்றைக் கண்களால் காண்பது, காதுகளால் கேட்பது போன்ற புலன்கள் மூலம் அறியும் அறிவு உள்ளது அல்லவா? அதைத்தான் அனுபவ அறிவு என்கின்றோம்.
அறிவை எப்படி பெற்றாலும் அதை நாம் நேரடியாக அறிந்துக் கொள்ள உதவ வேண்டும். நம்மால் அதை சரிப் பார்க்க முடிய வேண்டும்.
வெறும் கற்பனை மற்றும் நம்பிக்கை மட்டும் போதாது.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் இங்கு கூற வருகின்றார்.
“கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா என்ற ஒன்று இருந்தால் அதை நாம் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால், நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்”
அவர் கூறுவது போன்று, நம் அனுபவத்திற்கு வராத ஒன்று சரியான அறிவு கிடையாது.
சொர்கம், நரகம், மறுபிறப்பு, கர்ம வினை இவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்.
இவைகள் எல்லாம் நம் அனுபவ அறிவுக்கு ஒத்து வருமா?
இவைகள் வெறும் ஒரு நம்பிக்கையா...? அவ்வளவுதானா?!
சரி அடுத்து, இரண்டாவது பிராமணம், அனுமானம்.
அதாவது, அனுமானப் பிரமாணம்.
அனுமானம் என்றால் யூகித்து அறிவது.
நெருப்பு சுடும், மாடியில் இருந்து கீழே விழுந்தால் எலும்பு முறியும் என்று யூகித்து அறிய முடியும்.
அடுத்து, எங்கோ தூரத்தில் புகை வருகிறது என்றால், அங்கே நெருப்பு இருக்கும் இன்று அனுமானிக்க முடியும்.
இதைத்தான் யூகித்து அறிதல் என்கிறோம்.
அடுத்து, மூன்றாவது, ஆகமப் பிரமாணம்.
ஆகமங்கள் என்றால் சாஸ்திரங்கள் கூறுவது.
எல்லாவற்றையும் நாமே கண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது.
அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கூறுவதைக் கொண்டு, நாம் அறிந்து கொள்வது ஆகமப் பிரமாணம் எனலாம்.
இங்கு தான் நமக்கு சிக்கல்கள் வருகின்றது.
இதற்கும் நம்முடைய நேரடி காட்சி பிரமாணத்திற்கும் தொடர்பு இல்லை என்றால், என்ன செய்வது?
ஆகமம் ஒன்று கூறுகின்றது.
அதாவது, யாகத்தில் பொருள்களை போட்டு எரித்தால், தேவர்கள் வந்து வேண்டிய வரம் தருவார்கள் என்று ஆகம சாஸ்திரம் கூறுகின்றது.
நாம் அப்படி செய்துப் பார்த்தால், ஒரு தேவரும் வருவதாகத் தெரியவில்லை.
அப்படி என்றால் என்ன செய்வது?
அதற்கான விடையை இந்த யூ டியூப் வீடியோ அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆடியோ MP3 மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக