சாந்தி மந்திரங்கள்
எந்த ஒரு காரியத்தை தொடங்கும்
பொழுதும் அதற்கான மன நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.
சாந்தி மந்திரங்கள் நம்
பாரத தேசத்தில் வாழ்ந்த பழம்பெரும் ரிஷிகளின் அனுபவத்தில் வெளிப்பட்ட வேதப்பொக்கிசங்கள்.
பொதுவாக, உபநிஷதங்கள்,
ஸூக்தங்கள், போன்றவைகளைப் படிக்கும் பொழுது, அவைகளின் ஆரம்பத்துலும், இறுதியிலும் இந்த
சாந்தி மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
சாந்தி மந்திரங்கள் அனைத்தும், இறுதியில் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று நிறைவு
பெறுவதைக் காணலாம்.
'சாந்தி' என்றால் ‘அமைதி’ என்று பொருள்.
நம் அன்றாட
வாழ்வில் நமக்கு உண்டாகின்ற பல்வேறு துன்பங்களுக்கு மூலம், இங்கு கீழே கூறப்படுகின்ற
மூன்று விதமான துன்பங்கள் ஆகும்.
அத்தகைய துன்பங்களிலிருந்து
விடுபட்டு, நாம் அமைதியை அடையவே ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது.
மூன்று
வகை துன்பங்கள் வருமாறு.
1.
ஆத்யாத்மிகம்: நம்மால் நமக்கு வரும்
துன்பம்; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.
2.
ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் நமக்கு
வரும் துன்பங்கள்.
3.
ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும்
துன்பம், மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.
மூன்று முறை சாந்தி என்று
கூறுவதின் மூலம், இந்த மூவகைத் துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்காகப் பிராத்தனை
செய்யப்படுகிறது.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக