இந்த நூலின் தலைப்பு “மெய் அறிவு” என்பதாகும். அதாவது, இங்கு “மெய்” என்பதை தமிழ் மொழியில் ‘உடல்’ என்றும், ‘உண்மை’ என்றும் இரண்டு விதங்களில் அர்த்தங்கள் கொள்ளலாம்.
இங்கு “அறிவு” என்று
கூறப்படுவது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கின்றது. அதையே நாம் ‘இறைவன்’ என்கின்றோம்.
இந்த “அறிவு” என்ற ஒன்று மட்டுமே அனைத்து உயிர்களின் உள்ளேயும் அந்தர்யாமியாக
இருந்து, அவைகளை இயக்குகின்றது.
படைக்கப்பட்ட அனைத்து
உயிரினங்களிலும், ஓரறிவு படைத்த ஒரு செல் உயிரியான ‘கொரோனா’ முதல், ஆறறிவு படைத்த பல செல்கள் உயிரியான ‘மனிதன்’ வரை, உடல் என்ற உபாதியைப் பொருத்து
அறிவால் மாறுபடுகின்றது.
இதில், மனிதன் “மெய்” என்ற
வார்த்தைக்கு, ‘உடல்’ என்று பொருளை எடுத்துக்
கொண்டான் எனில், அவனது புரிதல் உடல் சார்ந்த அறிவாக மட்டுமே தனித்து நின்று விடுகின்றது.
அதே மனிதன் “மெய்” என்ற வார்த்தைக்கு, ‘உண்மை’ என்று பொருளை எடுத்துக் கொண்டான்
எனின், அவனது புரிதல் உண்மை அறிவான இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.
ஒரு வகுப்பறையில் படிக்கின்ற
பல மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒரே மாதிரியாகத்தான் பாடங்களை நடத்துகின்றார். ஆனால்,
அந்த மாணவர்களுக்குள் அதை புரிந்துக் கொள்கின்ற அறிவில் வித்தியாசம் இருப்பதினால்,
ஒருவன் அந்த பாடங்களை ஒழுங்காக புரிந்துக் கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல்
மாணவனாக இருக்கின்றான்.
ஆனால், அதே வகுப்பறையில்
படிக்கின்ற மற்ற சில மாணவர்களோ, அதே பாடங்களை சரியாக புரிந்துக் கொள்ளாததினால், குறைந்த
மதிப்பெண்கள் பெற்று, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களாக இருக்கின்றனர்.
அதாவது, அவரவர்கள் புரிந்துக்
கொள்வதை வைத்து, அவர்கள் ‘அறிவு’ இருக்கின்றது.
இதுப்போன்றே, இந்த “மெய் அறிவு” என்ற பதத்தை ‘உண்மை’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘ஞானி’ என்று அழைக்கப்படுகின்றான்.
இந்த “மெய் அறிவு” என்ற பதத்தை ‘உடல்’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘அஞ்ஞானி’ என்று அழைக்கப் படுகின்றான்.
இங்கு புரிதல்தான் வித்தியாசம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக