ஆன்மா
எதுவாக இருந்தாலும், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி, அது உருவமற்றது.
சிஷ்யனுக்கு குரு உபதேசிக்க
விரும்புகின்றார். அந்த உபதேச உரையாடல் பின்வருமாறு அமைகின்றது.
குழந்தாய்!
‘ஆலம் பழம் ஒன்றைக் கொண்டு வா’
‘இதோ அய்யனே’
‘அதைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
‘அங்கு என்ன காண்கிறாய்?’
‘அணு வடிவான விதைகள், அய்யனே’
‘குழந்தாய்! அவற்றுள் ஒன்றைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
அங்கு என்ன காண்கிறாய்?’
“ஒன்றுங்காணவில்லை’
‘இதோ அய்யனே’
‘அதைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
‘அங்கு என்ன காண்கிறாய்?’
‘அணு வடிவான விதைகள், அய்யனே’
‘குழந்தாய்! அவற்றுள் ஒன்றைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
அங்கு என்ன காண்கிறாய்?’
“ஒன்றுங்காணவில்லை’
குரு, சிஷ்யனை நோக்கிக் கூறுகின்றார்.
எந்த சூக்சும பொருளை
நீ காணவில்லையோ, அந்த சூக்சும பொருளிலிருந்தே இந்த மிகப் பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கின்றது.
குழந்தாய்! அதில் மட்டும்
சிரத்தை வைப்பாய். அணு மாத்திரமான அந்த ஸூக்சுமப் பொருள் எதுவோ…. அதுவாக நீயே உள்ளாய்
(தத்-துவம்-அஸி).
எது
உருவமற்றதோ, அது எங்கும் நிறைந்ததாகத்தான் இருக்கமுடியும் என்ற கருத்தை எல்லா தத்துவப்
பிரிவுகளும் ஒப்புக் கொள்கின்றன.
ஓம் தத் சத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக