சித்தம் என்பது, இந்த உலகை அறிய உதவுகின்றது.
இந்த சித்தம் என்பது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை, எண்ணங்கள் என்ற இவற்றின் ஒரு தொகுப்பு.
பொதுவாக, நம்முடைய மனம் அல்லது சித்தம் என்பது 5 நிலைகளில் இருக்கின்றது.
1. ஷிப்தா
2. முத்தா
3.
விஷிப்தா
4.
ஏகாக்ர
5.
நிரோத
எனப்படும்.
முதலாவது
- க்ஷிப்தா.
அதாவது, சலனம் உள்ள மனம்.
அலை பாய்ந்து கொண்டே இருப்பது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு மாறிக் கொண்டே இருக்கும். மனம் அலைந்து கொண்டே இருக்கும். இது மனதின் ஒரு நிலை.
இன்னொரு நிலை - முத்தா.
அதாவது, மந்த புத்தி.
மந்த புத்தி என்பது எதையும் முடிவெடுக்காமல், எதையும் அறிந்து கொள்ளாமல் முழிப்பது.
என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.
எதையும் ஒன்றுக்கு பத்து தடவை சொல்ல வேண்டும். மெதுவாகத்தான் புரியும்.
மூன்றாவதாக நிலை - விக்ஷிப்தா.
இது தடுமாறும் மனம்.
சரி என்று ஒன்றை நினைக்கும். அந்த பாதையில் போகும். சிறிது காலம் கழித்து, இது சரிதானா என்று தடுமாறும்.
பின் வேறு ஒரு வழியில் செல்லும். உறுதியற்ற தன்மை.
நாலு நாள் உடற் பயிற்சி செய்வது. உடல் எடை குறையவில்லை என்றால், இது சரியில்லையோ என்று அதை விட்டு விடுவது. வேறு ஒன்றைப் பிடிப்பது, இவ்வாறு தடுமாறுகின்ற மனம்.
நான்காவதாக உள்ள நிலை - ஏகாக்ர
இதை ஒரு முகப்பட்ட சிந்தனை என்கின்றோம்.
சிந்தனை அங்கும் இங்கும் ஓடாமல், தடுமாறாமல், மந்தமாக இல்லாமல், ஒரு முகமாக இருப்பது.
அசையாமல் ஒன்றையே பற்றி நிற்பது.
ஐந்தாவதாக வருவது - நிரோத:
நிரோதம் என்பது ‘தடுப்பது’ அல்லது அதை நம் ‘விருப்பப்படி செலுத்துவது’ எனலாம்.
நிரோதம் என்பதற்கு நேரடி மொழிப் பெயர்ப்பு என்றால் கட்டுப்படுத்தவது, அடக்குதல், ஆளுதல், தடை போடுதல் என்று வரும்.
யோகம் மூலம் சித்தத்தை, நாம் விரும்பும் வழியில் செலுத்த முடியும். சித்தம் நம் கட்டுக்குள் வரும். இதை அடைவதுதான் யோகத்தின் நோக்கம்.
அலைபாயும் மனத்தை, தடுமாறும் மனதை, மந்த மனத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் யோகத்தின் மிக முக்கியமான நோக்கம்.
சித்தம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும். அது மட்டும் அல்ல, உலகமே வசப்படும்.
யோக சித்த விருத்தி நிரோத:
“விருத்தி” என்றால் செயல்பாடு.
யோகப் பயிற்சின் மூலம்,
சித்தத்தை நாம் வென்றெடுக்கும் முயற்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக