ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இந்த யோக சாஸ்திரத்தை சூத்திர வடிவில் கொடுத்துள்ளார். இதில் 196 சூத்திரங்கள் உள்ளன. இவைகள் நான்கு அத்தியாயங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
சூத்திரம் என்பது, விரிவாகச் சொல்ல வேண்டிய உரையை சிலசொற்களில் சுருக்கமாக விளக்குவது எனலாம். அதாவது, ஒரு சில வார்த்தைகளால் செய்யுள் நடையில் இருக்கும். இதனை ‘நூற்பா’ என்றும் அழைக்கலாம்.
முதல் அத்தியாயம் சமாதி பாதம் என்றும், இரண்டாவது அத்தியாயம் சாதன பாதம், மூன்றாவது அத்தியாயம் விபூதி பாதம், நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம் என்பனவாகும்.
சமாதி பாதம் - Samadhi Pada (Chapter on Enlightenment) அறிவொளி - இதில் 51 சூத்திரங்கள் உள்ளன.
சாதன பாதம் - Sadhana Pada (Chapter on Practice) பயிற்சி - இதில் 55 சூத்திரங்கள்
உள்ளன.
விபூதி பாதம் - Vibhuti Pada (Chapter on Powers or
Manifestations) வெளிப்பாடு அல்லது
சக்தி - இதில் 56 சூத்திரங்கள் உள்ளன.
கைவல்ய பாதம் - Kaivalyam Pada (Chapter on Liberation) விடுதலை - இதில் 34 சூத்திரங்கள்
உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக