மெய்ஞானம் என்பது என்ன?
வேதத்தின் தத்துவ தரிசனங்கள் அனைத்துமே, சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும்.
வேதப்பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கே உரிய முறைகளில் ஒழுங்கு படுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தந்த ரிஷிகளை அந்தந்த சாஸ்திரங்களை நிறுவியவர்களாக அறியப்படுகின்றன.
இந்த ரிஷிகள் இவற்றுக்குரிய "சூத்திர நூல்களையும்" இயற்றியுள்ளார்கள்.
இவைகளை ஆஸ்திக தரிசனங்கள் என்றும், நாஸ்திக தரிசனங்கள் என்று இரண்டு விதமான தரிசனங்களாக காணப்படுகின்றது.
அதாவது, ஆஸ்திகம் என்றால் வேதத்தை ஏற்றுக் கொள்கின்ற தத்துவங்கள். நாஸ்திகம் என்றால், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத தத்துவங்கள் என பிரிகின்றன.
இதில் ஆஸ்திக தரிசனத்தை ‘வைதிக தரிசனம்’, அல்லது “வைதிக மதம்” என்றும் அழைக்கின்றனர்.
வேதத்தை ஏற்றுக்கொண்ட ஆறு தரிசனங்களும், அவற்றை நிறுவியவர்களும்:-
சாங்கியம் - கபில முனிவர்
யோகம் - பதஞ்சலி முனிவர்
நியாயம் - கௌதம முனிவர்
வைசேடிகம் - கணாத முனிவர்
மீமாம்ஸை (பூர்வ மீமாம்சை) - ஜைமினிமுனிவர்
வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - வியாஸ முனிவர்
இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற் கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் பின்வருமாறு:
சாங்கியம்
- யோகம்
நியாயம்
- வைசேடிகம்
மீமாம்சை
- வேதாந்தம்
இந்த தத்துவ நூல்கள் எதைப்பற்றி அதிகம் பேசியுள்ளன?
இந்த தத்துவங்கள் அனைத்துமே புருஷார்த்தம் (புருஷன் + அர்த்தம்) என்பதில் புருஷனாக இருக்கின்ற பரம(தன்)னை அறியும் வழிமுறைகளை தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நான்காக வகுத்து, அதில் இறுதி நிலையான “மோக்ஷம்” என்ற பிறவாப்பெரு நிலையை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்பதைப் பற்றி மிக முக்கியமாகப் பேசுகின்றது.
இதையே தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு என்று அழைக்கின்றோம்.
இந்த வீடுபேற்றை (விடுதலை) அறியக்கூடிய கருத்துக்களில் வேறுபாடுகள் வருகின்றபோது, தத்துவங்களும் வேறுபடுகின்றது.
விடுதலை என்பதை ‘மோக்ஷம்’ என்று சாஸ்திரம் அழைக்கின்றது.
இதில் எது விடுதலை? அதாவது, ‘வீடுபேறு’ என்றால் என்ன?
இதைப்பற்றி இந்த பதிவில் அறியலாம். 👆
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக