வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பஞ்சீகரணம்


பஞ்சீகரணம்

பஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று சாங்கிய தத்துவம் சொல்வதை வேதாந்த சாஸ்திரமும் ஏற்றுக் கொள்கிறது. 

படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலப்பொருட்கள் (பருப் பொருட்கள்) (ஸ்தூலப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. 

பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், ஸ்தூல வடிவ பஞ்ச பூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன. 

சூக்கும நிலையில் உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கப் படுகின்றன. 

இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. 

இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப் பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப் பொருட்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்