சனி, 15 ஏப்ரல், 2023

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம்

 



இதன் புத்தகத்தைப் படிக்க...

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம் புத்தகம்

 

ஆங்காரம் நீக்கும் ஓங்காரம்

  

 ஓம் என்பதையே ஓங்காரம் என்று அழைக்கிறோம். இந்த ஓம் என்ற ஒற்றை வார்த்தையை ’, ‘’, ‘ என்ற மூன்று எழுத்துக்கள் ஒருங்கிணைந்த நிலையில் உண்டான ஒரு சொல்லாக நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இந்த ஓம் என்ற ஒன்றைக் கொண்டு தொடங்காத மந்திரங்களே இல்லை எனலாம். ஏன்? இந்த ஓம் என்ற சொல் எல்லா மந்திரங்களுக்கும் முதலாவதாக கொடுக்கப்பட்டுள்ளது? மேலும், இந்த எழுத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இதன் பயன்பாட்டில் உள்ளது. 

இது இந்து மத இறை வழிபாட்டில் பயன்படுகின்ற எல்லா வேத மந்திரங்களுக்கும் முன்னால், ஓம் கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், இந்த உலகம் இயங்கத்தேவையான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை புரியக்கூடிய புதிரான எழுத்தாக இந்த ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதாவது, படைக்கப்பட்ட அனைத்து சீவராசிகளிலும் மனிதன் மட்டுமே மகத்தான பகுத்தறிவைக் கொண்டவன் என்பதினால், அவனால் மட்டுமே எழுத்துக்களைக் கொண்டு, அழகான சொற்களை வடிவமைத்து, அதன் வாயிலாகப் பேசக் கூடிய சக்தியைக் கொண்டவன். 

ஆகவே, அவன் சாதாரணமாக வாயை திறக்க முற்பட்டாலேயே, அது என்ற அமைப்பில் மட்டுமே அமைந்திருக்கும். அதனால், அவனிடமிருந்து முதன் முதலாக வெளிப்படும் ஓசை என்பது என்று உதிக்கின்றது. அதன் பிறகுதான் மற்ற வார்த்தைகள் உண்டாகும். அதிலே, அந்த என்ற உச்சரிப்பின் நீட்டம் என்று காக்கப்பட்டு, இறுதியில், அந்த ஓசையின் முடிவாக ம் என்று முற்று பெறுகிறது. 

இதனால், ஒரு சொல் பிறந்து, வளர்ந்திருந்து, இறுதியில் இல்லாமல் போவதைக் குறிக்கும் குறியீடாக இந்த ஓம்என்பது இருப்பதினாலே, இந்த பிரபஞ்சத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக் கூறுவதே, இந்த ஓம் என்ற பதத்தின் பரமபத பாதையாகும். 

ஓம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். 

இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த ஓம் சிறப்பித்து கூறப்படுகிறது. 

அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது? 

அது ஒரு வார்த்தை - அவ்வளவுதானே!...

இதைப்பற்றி மேலும் அறிய, இந்த நூலைப் படிக்கவும்.

நன்றி!

ஓம் தத் ஸத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்