புதன், 26 ஏப்ரல், 2023

36 தத்துவங்கள்

 

36 தத்துவங்கள்

 

தமிழ் வேதாந்த இலக்கியங்களில் இந்த ஜீவ - ஈஸ்வரப் - பிரபஞ்சம் 36 தத்துவங்களாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஜீவனிடம் இருக்கும் தத்துவங்கள்:

அ) ஸ்தூல சரீரம் - தத்துவங்கள் - 6

1) தோல்
2) சதை
3) ரத்தம்
4) நரம்பு
5) எலும்பு
6) மஞ்சை என ஸ்தூல தத்துவங்கள் மொத்தம் (6)
 

இந்த 6 தத்துவங்களும் ஸ்தூல பஞ்சபூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது.


ஆ) சூக்கும சரீரம் - தத்துவங்கள் 20:

1) பஞ்ச வாயுக்கள் - 5

1) பிராணன்
2) அபானன்
3) வியானன்
4) உதானன்
5) சமானன் என வாயுத் தத்துவங்கள் மொத்தம் (5)


2) கர்மேந்திரியங்கள் - 5

1) வாக்கு
2) பாணி
3) பாதம்
4) கருவாய்
5) எருவாய் என கர்மேந்திரியங்கள் மொத்தம் (5)
 

3) ஞானேந்திரியங்கள் - 5

கேட்கும் கருவி(காது)
பார்க்கும் கருவி (கண்)
நுகரும் கருவி (மூக்கு)
சுவைக்கும் கருவி (நாக்கு)
தொடு உணர்வுக் கருவி(தோல்) என ஞானேந்திரியங்கள் மொத்தம் (5)
 

(கண், காது என்பவை ஸ்தூலத்திலும், அதன் செயல்படு தன்மையான கருவிகள் சூக்கும சரீரத்தில் என அறிக)

4) அந்தகரணங்கள் - 5

1) மனம்
2) புத்தி
3) சித்தம்
4) அகங்காரம்
5) உள்ளம் என அந்தகரணத் தத்துவங்கள் மொத்தம் (5)

 ஆக, சூக்கும சரீரம் (பஞ்ச வாயுக்கள் + பஞ்ச கர்மேந்திரியங்கள் + பஞ்ச ஞானேந்திரியங்கள் + பஞ்ச அந்தகரணங்கள்) 20 தத்துவங்கள்.

காரண சரீரத் தத்ததுவங்கள் (2)

1) ஜீவன்
2) ஜீவனுக்குக் காரணமான அவித்தை எனும்
ராஜஸ குணம் 

ஆக, ஜீவனிடம் மட்டும் தூல தத்துவம் 6 + சூக்கும சரீரத் தத்துவங்கள் 20 + காரண சரீரத் தத்துவங்கள் 2 என 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன. 

ஆக, மொத்தம் இருக்கும் 36 தத்துவங்களில், 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன. 

இவ்வாறு படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனின் ஸ்தூல, சூக்கும சரீரங்கள் அஞ்ஞான சக்தி எனும் தாமஸ குணத்திலிருந்து வந்த ஸ்தூல, சூக்கும பஞ்ச பூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு ஜீவனின் காரண சரீரமாக இருப்பது அவித்தை எனும் ராஜஸ குணமே. 

அதாவது ஜீவனின் காரண சரீரம் அவித்தையாகவும் (ராஜஸ குணமாகவும்) காரிய சரீரங்ககளான ஸ்தூல சூக்கும சரீரங்கள் அஞ்ஞான பஞ்சபூத. காரியங்களாக (தாமஸ குணமாக) ஜீவனுக்குள்ளே இருக்கிறது. 

ஜீவனுக்கு வெளியே இருக்கும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் மற்றும் மாயை, ஈஸ்வர தத்துவங்கள் மொத்தம் 7.

1) மண்
2) தண்ணீர்
3) நெருப்பு
4) காற்று
5) ஆகாயம்

6) ஈஸ்வரன்
7) ஈஸ்வரனுக்குக் காரணமான மாயை எனும் சத்துவ குணம்.
 

ஆக, ஜீவ தத்துவங்கள் - 28
பஞ்ச பூதங்கள் - 5
ஈஸ்வரன் - 1
மாயை - 1
 

ஜீவேஸ்வர ஜகத் தத்துவங்கள் மொத்தம் (28+7) - 35 தத்துவங்கள். 

இந்த 35 அநித்தியமான, கல்பிதமான தோற்ற தத்துவங்களுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் வாஸ்தவமான நித்தியமான 36ஆவது தத்துவம் பிரம்மமே!

இந்த பிரம்மத்தைத் தவிர அனைத்து 35 தத்துவங்களும் அநித்தியம் என்றும், பிரம்மம் மட்டுமே நித்தியம், சத்தியம் என்றும் பிரித்து அறிவதே
ஆத்ம ஞானம் ஆகும். 

ஆக, பிரம்மமே உனக்குள் இருக்கும் ஆத்மா!

  ஓம் தத் ஸத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்