சுவாமி பிரபஞ்சநாதன் எழுதிய புத்தகங்களைப் படிக்க, கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.
புதன், 26 ஏப்ரல், 2023
36 தத்துவங்கள்
36 தத்துவங்கள்
தமிழ் வேதாந்த இலக்கியங்களில் இந்த ஜீவ - ஈஸ்வரப் - பிரபஞ்சம் 36 தத்துவங்களாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
ஜீவனிடம் இருக்கும் தத்துவங்கள்:
அ) ஸ்தூல சரீரம் - தத்துவங்கள் - 6
1) தோல்
2) சதை
3) ரத்தம்
4) நரம்பு
5) எலும்பு
6) மஞ்சை என
ஸ்தூல தத்துவங்கள் மொத்தம் (6)
இந்த
6 தத்துவங்களும் ஸ்தூல பஞ்சபூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது.
ஆ) சூக்கும சரீரம் - தத்துவங்கள் 20:
1) பஞ்ச வாயுக்கள் - 5
1) பிராணன்
2) அபானன்
3) வியானன்
4) உதானன்
5) சமானன் என வாயுத் தத்துவங்கள் மொத்தம் (5)
2) கர்மேந்திரியங்கள்
- 5
1) வாக்கு
2) பாணி
3) பாதம்
4) கருவாய்
5) எருவாய் என கர்மேந்திரியங்கள் மொத்தம் (5)
3) ஞானேந்திரியங்கள் - 5
கேட்கும் கருவி(காது)
பார்க்கும் கருவி (கண்)
நுகரும் கருவி (மூக்கு)
சுவைக்கும் கருவி (நாக்கு)
தொடு உணர்வுக் கருவி(தோல்) என ஞானேந்திரியங்கள் மொத்தம் (5)
(கண்,
காது என்பவை ஸ்தூலத்திலும், அதன் செயல்படு தன்மையான கருவிகள் சூக்கும சரீரத்தில் என
அறிக)
4) அந்தகரணங்கள்
- 5
1) மனம்
2) புத்தி
3) சித்தம்
4) அகங்காரம்
5) உள்ளம் என அந்தகரணத் தத்துவங்கள் மொத்தம் (5)
காரண சரீரத் தத்ததுவங்கள் (2)
1) ஜீவன்
2) ஜீவனுக்குக் காரணமான அவித்தை எனும் ராஜஸ
குணம்
ஆக, ஜீவனிடம் மட்டும் தூல தத்துவம் 6 + சூக்கும சரீரத் தத்துவங்கள் 20 + காரண சரீரத் தத்துவங்கள் 2 என 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன.
ஆக, மொத்தம் இருக்கும் 36 தத்துவங்களில், 28 தத்துவங்கள் ஜீவனுக்குள்ளே இருக்கின்றன.
இவ்வாறு படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனின் ஸ்தூல, சூக்கும சரீரங்கள் அஞ்ஞான சக்தி எனும் தாமஸ குணத்திலிருந்து வந்த ஸ்தூல, சூக்கும பஞ்ச பூதங்களிலிருந்து இறைவனால் ஆக்கிக் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஜீவனின் காரண சரீரமாக இருப்பது அவித்தை எனும் ராஜஸ குணமே.
அதாவது ஜீவனின் காரண சரீரம் அவித்தையாகவும் (ராஜஸ குணமாகவும்) காரிய சரீரங்ககளான ஸ்தூல சூக்கும சரீரங்கள் அஞ்ஞான பஞ்சபூத. காரியங்களாக (தாமஸ குணமாக) ஜீவனுக்குள்ளே இருக்கிறது.
ஜீவனுக்கு
வெளியே இருக்கும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் மற்றும் மாயை, ஈஸ்வர தத்துவங்கள் மொத்தம் 7.
1) மண்
2) தண்ணீர்
3) நெருப்பு
4) காற்று
5) ஆகாயம்
6) ஈஸ்வரன்
7) ஈஸ்வரனுக்குக் காரணமான மாயை எனும் சத்துவ குணம்.
ஆக, ஜீவ தத்துவங்கள் - 28
பஞ்ச பூதங்கள் - 5
ஈஸ்வரன் - 1
மாயை - 1
ஜீவேஸ்வர ஜகத் தத்துவங்கள் மொத்தம் (28+7) - 35 தத்துவங்கள்.
இந்த 35 அநித்தியமான, கல்பிதமான
தோற்ற தத்துவங்களுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் வாஸ்தவமான நித்தியமான 36ஆவது தத்துவம்
பிரம்மமே!
இந்த பிரம்மத்தைத் தவிர அனைத்து 35 தத்துவங்களும் அநித்தியம்
என்றும், பிரம்மம் மட்டுமே நித்தியம், சத்தியம் என்றும் பிரித்து அறிவதே ஆத்ம ஞானம் ஆகும்.
ஆக, பிரம்மமே உனக்குள் இருக்கும்
ஆத்மா!
வெள்ளி, 21 ஏப்ரல், 2023
பஞ்சீகரணம்
பஞ்சீகரணம்
பஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு “பஞ்சீகரணம்” என்று சாங்கிய தத்துவம் சொல்வதை வேதாந்த சாஸ்திரமும் ஏற்றுக் கொள்கிறது.
படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலப்பொருட்கள் (பருப் பொருட்கள்) (ஸ்தூலப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது.
பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், ஸ்தூல வடிவ பஞ்ச பூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன.
சூக்கும நிலையில் உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கப் படுகின்றன.
இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.
இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப் பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப் பொருட்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.
செவ்வாய், 18 ஏப்ரல், 2023
சனி, 15 ஏப்ரல், 2023
ஆங்காரம் நீக்கும் ஓங்காரம்
இதன் புத்தகத்தைப் படிக்க...
ஆங்காரம் நீக்கும் ஓங்காரம் புத்தகம்
ஆங்காரம்
நீக்கும் ஓங்காரம்
“ஓம்” என்பதையே ‘ஓங்காரம்’ என்று அழைக்கிறோம். இந்த “ஓம்” என்ற ஒற்றை வார்த்தையை ‘அ’, ‘உ’, ‘ம’ என்ற மூன்று எழுத்துக்கள் ஒருங்கிணைந்த நிலையில் உண்டான ஒரு சொல்லாக நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த “ஓம்” என்ற ஒன்றைக் கொண்டு தொடங்காத மந்திரங்களே இல்லை எனலாம். ஏன்? இந்த “ஓம்” என்ற சொல் எல்லா மந்திரங்களுக்கும் முதலாவதாக கொடுக்கப்பட்டுள்ளது? மேலும், இந்த எழுத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இதன் பயன்பாட்டில் உள்ளது.
இது இந்து மத இறை வழிபாட்டில் பயன்படுகின்ற எல்லா வேத மந்திரங்களுக்கும் முன்னால், “ஓம்” கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், இந்த உலகம் இயங்கத்தேவையான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை புரியக்கூடிய புதிரான எழுத்தாக இந்த ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, படைக்கப்பட்ட அனைத்து சீவராசிகளிலும் மனிதன் மட்டுமே மகத்தான பகுத்தறிவைக் கொண்டவன் என்பதினால், அவனால் மட்டுமே எழுத்துக்களைக் கொண்டு, அழகான சொற்களை வடிவமைத்து, அதன் வாயிலாகப் பேசக் கூடிய சக்தியைக் கொண்டவன்.
ஆகவே, அவன் சாதாரணமாக வாயை திறக்க முற்பட்டாலேயே, அது “அ” என்ற அமைப்பில் மட்டுமே அமைந்திருக்கும். அதனால், அவனிடமிருந்து முதன் முதலாக வெளிப்படும் ஓசை என்பது ‘அ’ என்று உதிக்கின்றது. அதன் பிறகுதான் மற்ற வார்த்தைகள் உண்டாகும். அதிலே, அந்த ‘அ’ என்ற உச்சரிப்பின் நீட்டம் ‘உ’ என்று காக்கப்பட்டு, இறுதியில், அந்த ஓசையின் முடிவாக ‘ம்’ என்று முற்று பெறுகிறது.
இதனால், ஒரு சொல் பிறந்து, வளர்ந்திருந்து, இறுதியில் இல்லாமல் போவதைக் குறிக்கும் குறியீடாக இந்த “ஓம்” என்பது இருப்பதினாலே, இந்த பிரபஞ்சத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக் கூறுவதே, இந்த “ஓம்” என்ற பதத்தின் பரமபத பாதையாகும்.
“ஓம்” பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
இந்து சமயத்தில் வேதத்தில் இருந்து, உபநிஷதங்கள், கீதை, பாஷ்யங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த “ஓம்” சிறப்பித்து கூறப்படுகிறது.
அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது?
அது ஒரு வார்த்தை -
அவ்வளவுதானே!...
இதைப்பற்றி மேலும் அறிய, இந்த நூலைப் படிக்கவும்.
நன்றி!
ஓம் தத் ஸத்!
செவ்வாய், 11 ஏப்ரல், 2023
கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் [பாடல்கள் 22 30]
கைவல்ய நவநீதம்
(ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள்)
முகவுரை
கைவல்ய நவநீதம் என்பது
ஒர் வேதாந்த மெய்யியல் தமிழ்
நூல் ஆகும்.
தமிழ் அத்வைத வேதாந்த நூல்களில் தலை சிறந்தது “கைவல்ய நவநீதம்” எனப்படுகிறது.
இந்த நூல் 1500 - களில் எழுதப்பட்டது. இந்த நூலை நன்னிலம் ஸ்ரீ நாராயண தேசிகரின் மாணவர் ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்டது.
இந்நூலில் ஆசிரியருக்கும், நன்மாணவனுக்கும் இடையே நிகழுகின்ற உரையாடல் போலவும், ஒரு தந்தை தன் மகனுக்கு கூறும் அறிவுரைகள் போலவும் எழுதப்பட்டு உள்ளது.
இந்த நூலில் தத்துவ விளக்கப்படலம்,
சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகள் உள்ளன.
வெள்ளி, 7 ஏப்ரல், 2023
உன்னை நீ அறிவாயா! [வகுப்பு - 16] - நிறைவுப்பகுதி.
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...