அன்பு
இல்லாவிட்டால், இந்த பிரபஞ்சம் இல்லை. இந்த அன்புணர்வு அனைத்திலும்
வெளிப் படுவதை உணர்ந்துக் கொள்ளக்கூடிய மேம்பட்ட மனம் படைத்த மனிதன் மட்டுமே, அந்த
பேருணர்வை (ஆன்மாவை) தன்னுள்ளே அனுபவமாக உணர முடியும்.
அதாவது,
பேருணர்வாகிய உணர்வுவெளி என்ற வெட்டவெளி மட்டுமே எங்கும்,
எதிலும் எல்லை இல்லாமல் நீக்கமற நிறைந்துள்ளது என்ற உண்மையை மனித மனம் மட்டுமே உணர
முடியும்.
அதற்கான
அடிப்படை தகுதிகளை அந்த மனித மனம் அடைந்தாக வேண்டும். அப்பொழுது மட்டும்தான் இறையனுபூதி
என்பது
என்ன? என்பதும் விளங்கும்.
அதற்கான
வழிமுறைகள் மூன்று படிநிலைகளாக மூன்று வழிகளில் கூறப்படுகின்றன. அவைகளை, ச்ரவண,
மனன, நிதித்யாஸனம் எனப்படுகின்றது. அதிலே, முதலில் வருவது ச்ரவணம். இரண்டாவது
மனனம். மூன்றாவது
நிதித்யாஸனம்.
இந்த
மூன்று படி நிலைகளை, ஒவ்வொன்றாக மனிதன் தன் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வந்தால் மட்டுமே,
அவன் ஆன்மாவை (பேருணர்வை அல்லது இறைவனை) அனுபவமாக உணர முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக