நம் முகத்தையே நாம் கண்ணாடிக்குள்ளே மற்றொரு பிரதிபிம்ப முகமாகக் காண்பதுப்போன்று, பரமான்மாவின் (அறிவின்) நிழல் பிரதிபிம்பித்து, சீவனுக்கு (மனதிற்கு) ‘சுயபுத்தி’ (மனம்) போன்று தோன்றுகிறது.
கலங்கமில்லாத ஈஸ்வரவிருத்தி (பிரபஞ்ச மனம்) பிரதிபிம்பித்து, சீவனில் ‘சிதாபாசன்’ என்றவாறு நம்முடைய ‘தனித்த மனம்’ உண்டாகின்றது.
இவ்வாறு, பிரதிபிம்பித்த அந்த அகண்ட பேரறிவாகிய பிரம்மத்தின் அறிவுதான் தன்னுடைய சிற்றறிவு என்பதை அறிந்துக் கொள்வதைத்தான் இங்கு “ஞானம்” எனப்படுகின்றது.
அதாவது, அறிபவன்,
அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றில் (திரிபுடி),
அறிபவனாகிய ‘மனம்’, “அறிவு” என்ற ஆன்மாவின்
மூலமாக, அறியப்படுகின்ற பொருள்களான இந்திரியங்களைக் கொண்டு அனைத்தையும் அறிகின்றது
என்று அறிவதே “ஆத்ம ஞானம்”
என்று
கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக