ஆடு! - சிங்கம்! (சிறு கதை)
கதையில் வரும் இளம் சிங்கம், மூத்த சிங்கத்தைக் கண்டவுடன் “நான் உன்னைப் போன்று சிங்கமாக ஆவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா!...? என்று கேட்டால்....
அதற்கு அந்த மூத்த சிங்கமும் வேடிக்கையாக நீ யோகா பழக வேண்டும், தலைகீழாக நிற்க வேண்டும், நாள்தோறும் பூசைகள் செய்ய வேண்டும், அத்துடன் அனுதினமும் மூச்சு பயிற்சிகளை விடாமல் மேற்கொள்ள வேண்டும், உண்ணா நோன்பு கடைப்பிடிக்க வேண்டும், புண்ணியக் காரியங்கள் செய்ய வேண்டும், அத்துடன், அனைத்தையும் துறந்த துறவியாக வேண்டும்…. முக்கியமாக முடிந்த போதெல்லாம், “நான் சிங்கம்”, “நான் சிங்கம்” என்று ஓயாமல் ஜெபம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
அந்த இளம் சிங்கமும் இவைகளையெல்லாம் உண்மையெனக் கடைபிடித்துக் கொண்டிருந்தால், அவைகள் எல்லாம் வீண் முயற்சியாகிவிடும்.
ஏனெனில், அந்த இளம் சிங்கம் ஏற்கனவே சிங்கம்தான்.
ஆகவே, தன்னை அறிய வேண்டுமானால், இங்கு விழிப்புதான் வேண்டுமே தவிர….!
வீணான பயிற்சிகள் எதுவும் வேண்டியதில்லை!.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக