பிரம்மமே இந்த பிரபஞ்சமாக அல்லது இயற்கையாக நம்மால் உணரப்படுகிறது. அதன்மீது பகவான் ஸ்ரீசங்கரர் தன் விளக்கத்தை வெளிப்படுத்தியதுதான் பாம்பு - கயிறு மற்றும் திருக் - திருஷ்யம் போன்ற அத்வைத தரிசனம் ஆகும்.
இதிலே, ஆதி வேதாந்தம் ஒன்றேயான பிரம்மத்தின் துவக்கம் மற்றும் விரிவு போன்ற நிலைகளை இந்த பிரபஞ்சமாக ஏற்றுக் கொண்டது. அதிலே, பிரம்மம் வேறு, பிரபஞ்சம் வேறு என்றாலும், அந்த பிரபஞ்சத்தின் மூலக் காரணம் இந்த பிரம்மம்தான் என்றது.
ஆனால், பகவான் ஸ்ரீசங்கரர் கூறும் அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும், அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின் அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் கூறப்படுகிறது. அதிலே, அந்த அறியாமையை நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது.
ஆக, நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. என்பது இவரது சித்தாந்தம்.
ஆதிசங்கரரின் கயிறும், பாம்பும் பற்றிய நியாயககருத்து கூறவருவது என்னவெனில், ஒரு கயிறு பாம்பாகத் தெரியும் வரை, அது பாம்பாகவே உணரப்படுகிறது.
அவ்வாறு பாம்பாக உணரும் போது, அந்த கயிறானது உண்மையில் பாம்பாகவே உள்ளது.
அதாவது, அது பாம்பாக உள்ளதிலிருந்து சற்றும் மாறவே இல்லை.
ஆனால், அதன்மீது வெளிச்சம் பட்டவுடன் அப்படியே தலைகீழாக மாறி, இதுவரை பாம்பாகத் தெரிந்தது, தற்போது கயிறாகத் தெரிகிறது...!
அதாவது, இரண்டுமே ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன உள்ளது....? எனவே அந்த பாம்பிற்கு ஆதாரமாக கயிறு மட்டுமே அங்கு இருந்தது என்கிறார்.
இதுப்போன்றே, ப்ரஹ்மம் ஒன்று மட்டும்தான் உள்ளது, அதன் வாயிலாக வெளிப்பட்டதுதான் இந்த மாயை என்ற பிரபஞ்சம் என்பதை ஞானம் என்ற வெளிச்சம் வந்தால் மட்டுமே ஒருவன் தன்னை உணர்ந்த உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக