ஞாயிறு, 19 டிசம்பர், 2021

அன்பே சிவம்

 அன்பே சிவம்!


புத்தகம் இங்கு உள்ளது  👈

சிவம் என்னும் சொல்லுக்கு நன்மை என்று பொருள்..! 

எங்கும் நன்மை! எதிலும் நன்மை! உள்ளது. 

அதையே எங்கும் சிவம்…! எதிலும் சிவம்…! என்கிறார்கள்..! ஆக அனைத்து உயிர்களிடமும் நன்மையைக் கண்டு, அன்பு செலுத்துவதே சிவ மயமாதல் எனலாம். 

அதனால்தான் பேச்சு வழக்கில் கூறப்படும் வார்த்தை நன்மை உண்டாகட்டும் எனக் கூறவேண்டுமானால், சிவ சிவா என கூறுவது இயல்பு. 

சிவம் என்பதில், சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம் என்ற மூன்று எழுத்துக்களில் சிகாரம் என்றால் - அறிவு என்றும், வகாரம் என்றால் - மனது என்றும், மகாரம் என்றால் - ஆற்றல் அல்லது மாயை என்றும் பொருள்படும். 

அதில், முதல் எழுத்தாகிய சி என்ற அறிவை கொண்டு, என்ற மனதில் குடிகொண்டுள்ள ம் என்ற மாயையை அறிந்து, அதன் வாயிலாக சிவத்தை அறிவதே இங்கு சிவ மயமாதல் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்