வெள்ளி, 10 டிசம்பர், 2021

திருக் - திருஷ்ய விவேகம்!


புத்தகம்  👈

 திருக் - திருஷ்ய விவேகம்!

========================

கயிற்றை பாம்பு என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற அறியாமை அகன்றால், அது பாம்பு அல்ல கயிறுதான் என்று உணருவதுபோல, மாயை என்பதை அறிந்தால் ப்ரஹ்மமே நித்தியம், அதுவே சத்தியம் என்பதையும், அந்த ப்ரஹ்மமே நான் என்பதையும் உணரலாம் என்பதே தத்துவ தரிசனம். 

ஆக, பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும், விழிப்புணர்வும் அவசியம். அவ்வாறே, இந்த உலகமாகத் தெரியும் ப்ரஹ்மத்தை உணர ஞானம்” அவசியம். அந்த ஞானத்தின் மூலம் நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம். 

சரி!, இந்த மாயை எப்படி வந்தது? எப்போது வந்தது? ஏன் வந்தது? 

இந்த மாயை என்பது பற்றிப் பலரும் பலவிதமாகக் கூறுவதற்குக் காரணம், அவர்கள் எல்லோருமே பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் எடுத்துக் கொள்கின்றனர். 

மித்யா அல்லது மாயை என்பது அறியாமை என்றும்நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம் என்றும், அந்த மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்றும், மேலும், அந்த மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பது போல, எல்லாமே ஏற்றி எண்ணங்களாக உள்ளன. 

இந்த குழப்பம் மற்றும் ஏற்றிவைக்கப்பட்ட எண்ணங்கள் மூலம் இந்த மாயையைக் கண்டு மனம் மயங்குகின்றனர், அத்துடன் அந்த மாயைக் கண்டு அஞ்சுகின்றனர். 

ஆனால், அரிதான உண்மை ஒன்று உண்டு. 

அது, அந்த மாயையே ப்ரஹ்மத்தை அறிவதற்கான திறவுகோல் என்றால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா...?

ஆம்! அதைப் பற்றி அறிய ஆவல் உண்டாகுமானால், இந்த நூலைப் படித்துப் ப்யன் பெறலாம்.


நன்றி! 👀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்