வியாழன், 23 செப்டம்பர், 2021

நிர்வாண சடகம்


Audio MP3  👈

Book 👈

நிர்வாண சடகம் =============== சடகம் என்றால் ஆறு என்று பொருள். இது ஆறு ஸ்லோகங்கள் கொண்டது. இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று கூறி, இறுதியில் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், பரமான்மாவுன் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து மிக அழகாக எழுதப்பட்ட இந்த ஆறு ஸ்லோகங்களும் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதும், இவைகள் அனைத்தையும் சாட்சியாகப்பார்த்துக் கொண்டு இருக்கும் “நான்” இவைகளில் இருந்து வேறுபட்டவன். நமது உடல் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது சூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய ஸ்தூலக் கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது உடலின் அங்கங்களே. உடலே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண் புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும்? அதனால், அவைகளும் நாம் அல்ல. அப்படியானால், நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமோ, அப்பொழுது, அந்த “நான்” யார்? என்று கேட்டு, அதைப்பற்றிய சதா சர்வ காலமும் சிந்தித்துப் பார்க்க முடியும். ஆக, இந்த ‘நான்’ என்று கிளம்புகின்றவன் யார்? எங்கு இருக்கிறான்? என்று ஆராய்ந்து, உணர்ந்துப் பார்த்தால், ஒவ்வொருவரின் இதயகுகைக்குள்ளே, தன்னில் தானாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உணர்வே “சிவம்”. அந்த ‘சிவமே நான்’ என்பதை இந்த ஆறு பாடல்களின் வாயிலாக உபதேசிக்கிறார் பகவான் ஆதிசங்கரர். அவரது அந்த ஆறு பாடல்களுக்க்கான விளக்க உரை இந்த ஆடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கேட்டு, கற்று பயனடைய வாழ்த்துக்கள். இதன் MP3 ஆடியோ பகுதியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், கீழே உள்ள இணையத்தில் இருந்து, பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்