சனி, 4 செப்டம்பர், 2021

வெட்டவெளி தத்துவம்


வெட்டவெளி தத்துவம் ====================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்துக் கொண்டிருக்கும்’ ஒரு இயக்கம். அதாவது, ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே ‘பிரபஞ்சம்’ என்று பெயர். பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே ஆகும். அதாவது, நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே பிரபஞ்சம். அதை தமிழில் “பேரண்டம்” எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக்கண்களால் ழுமையாகப் பார்த்துவிட முடியாது. அறிவியல் ஆய்வுகள் கூட, அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்துக் கூறுகிறது. ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதைக் கூட, முடிந்த முடிவாக, விஞ்ஞானத்தினால் உறுதி செய்ய முடியாது. காரணம், அது விநாடிக்கு, விநாடி விரிந்துக் கொண்டே இருக்கின்றது. அத்தகைய இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் இருப்பது “வெளி” ஆகும். இங்கு ‘வெளி’ என்று கூறுவதை பஞ்ச பூதங்களிலுள்ள ‘ஆகாயம்’ என்று தவறாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. இதனை “வெட்டவெளி” எனத் தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர். இதுவே, “பிரம்மம்”, “சிவம்”, “இருப்பு”, “இறைவன்”, “அல்லா”, ”யெகோவா”, “மெய்ப்பொருள்”, “ஆதிமூலம்” எனப் பலவாறு அழைக்கப்படுகின்றது. இந்த வெட்டவெளியிலிருந்து வெளிப்பட்டதே இந்த பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், சூரியக் குடும்பம், பூமி, மற்றும் அதில் வாழும் உயிரினங்களுடன் மனிதன் முதலான எல்லாமே. வெட்டவெளியில் இருந்து இந்த ‘பிரபஞ்சம்’ தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு, என்ன நிகழ்ந்திருக்கும் அல்லது எது இருந்தது என்பதை? அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கின்றது. மெய்ஞானமோ முடிந்த முடிவை ‘சித்தாந்தம்’ ஆக்கி விட்டது. அத்தகைய அகண்ட பேரண்டத்தைப் பற்றியும், அதன் உண்மைத்தன்மைப் பற்றியும், அதற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும் எளிமையாக இந்த ஆடியோ பதிவின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம். நன்றி! என்றும் அன்புடன், சுவாமி பிரபஞ்சநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்