ஸ்ரீ கரபாத்திர
சுவாமிகள்
(வாழ்க்கை வரலாறு)
நம்முள் உள்ள அறியாமை இருளை நீக்கி, ஒளி பொருந்திய ஆன்ம ஞானத்தை அளிப்பவரே குரு. அத்தகைய குருவானவர் நமக்கு சத்தியத்தைக் காட்டிக் கொடுப்பதினால், நாம் அவரை சத்குரு என்று அழைக்கின்றோம்.
அத்தகைய குருவருள் இருந்தால் மட்டும்தான், அவரை அடைபவர்களுக்கு திருவருள் உண்டாகும்.
அதாவது, நம்மையே நம்மால் முழுமையாகக் காண முடியுமா? என்றால், நிச்சயமாக முடியாது. காரணம், நமது கண்ணையே நம்மால் காண்பது நடக்காத காரியம் அல்லவா?
அனைத்தையும் காண்கின்ற கண்களினால், தன் கண்ணை காண்பதற்கு அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அவசியமாகின்றது.
அதாவது, நம் கண்களை நாம் பார்தேயாக வேண்டும் எனில், அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் தேவைப்படுவது போன்று, நம்மைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு அவசியமாக ஒரு குருவும் தேவைப்படுகின்றார்.
அத்தகைய அற்புதமான ஒரு குருவைப் பற்றி அவசியம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
ஆம்!,
அவரே ஸ்ரீ
ல ஸ்ரீ
கரபாத்திர
சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக