]ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
சனாதன தர்மமும்! சத்தியமும்!
இந்த
“நான்” என்பதற்கு ஆதாரமானது எது? என்ற
கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலை அறிய ஆர்வம் பிறந்தது?
ஆம்!
அந்த ஆர்வத்தினால், உண்டான என்னுடைய உன்னத அறிவு மையம், உணர்சிகளால்
உண்டான உயிரினங்களின் பல்வேறு உடல்களின் மூலம், ஒரு அறிவு உடைய தாவரங்கள்
முதல், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை, பிரதிபிம்பிக்கின்ற
பொழுது, அந்த உடல்களின் தன்மைக்கு ஏற்ப, அவைகளின் பிரஞ்ஞை (பேருணர்வு) வெளிப்படுவது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில், அரிதான இந்த மனித உடல் கிடைத்த உயிரினங்கள் மட்டுமே,
தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான புலன்களாகிய புறக்கரணங்கள் மற்றும் அகக் கரணங்களைக்
கொண்டு, “நான்” என்ற தன்முனைப்புக்கு காரணமான தன்னுணர்வு மையத்தை எளிதாக அறிந்து,
அதன் உணர்ச்சிகளால் வெளிப்பட்ட பல்வேறு எண்ணக்குவியல்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகிய
மனதைக் கடந்து, மகத்தான தன் சுயத்தை, எளிதாக அகத்தில் கண்டு கொள்ள முடியும்.
அந்த அகப்பயணத்தில் தாங்கள் கண்டறிந்த ஆழமான பல அரிய உண்மைகளை ஒன்றாகத்
தொகுத்து, அதன் வாயிலாக அவர்கள் உணர்ந்த வந்த, அந்த உன்னத அறிவை “வேதங்கள்” என்கின்றோம்.
இந்த வேதங்கள் என்பது, சமய நூல்கள் அல்ல.
வேதங்கள் என்பது, அன்றைய ரிஷிகள் தங்கள் உள்ளத்தின் உள்ளே உணர்ந்து,
வெளிப்படுத்திய அக உளவியல் உண்மைகளை தொகுத்து, அந்த பேருணர்வின் பெருமைகளாகப் பேசப்பட்டது.
வேதங்களில்
சிருஷ்டி அல்லது
படைப்பு பற்றிய
தத்துவங்களைக் கடவுளர்கள் என்ற
கருத்துக்கள் வழியாக வெளிப்படுத்தி விளக்கினார்கள்.
பிரஜாபதி, விஷ்ணு, ருத்ரன் என்றும்,
இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்றும், இயற்கையின் தத்துவார்த்தங்களைக் குறியீடுகளாகக்
கொண்டு, அவர்கள் அகத்தில் அறிந்துக் கொண்ட ஆழ்தள உண்மைகளை அப்படியே அறிவித்தனர்.
இங்கே கூறப்படும் படைப்பு என்பது, அவர்களது அறிவுணர்வு வெளியில் நிகழ்ந்த
‘படைப்பு’ ஆகும்.
அத்தகைய
இந்த அறிவுணர்வு வெளியில் அகம்
- புறம் என்னும்
இருமைகள் எல்லாம்
என்றுமே கிடையாது.
அந்த
இருமைகளான பிரிவுகள் எல்லாம், இந்த பேருணர்வு பிரக்ஞையில், (அந்த அறிவாக) தன்னை அறிந்துக்
கொள்வதற்கு முந்தைய நிலையாகிய அறியாமையில், அந்த உணர்ச்சிகளின் தொகுப்பாகிய “மனம்” காரணமாக இருந்தது.
தன்னை
அறிய ஆதாரமாக இருந்த “நான்” என்னும்
தன் முனைப்பின் மூலத்தை அறிந்து, அதை தன்னுணர்வு மயமாக அறிந்து, அதற்கான ஆதியைக் கண்டறிந்தார்கள்.
அதுவே,
“பிரம்மம்” என்று குறிப்பிட்டார்கள்.
இதில்,
“பிரம்மம்” என்பது கடவுள் அல்ல. அது ஒரு
‘தத்துவம்’ மட்டுமே ஆகும்.
அதுவும்
அவர்களால் மற்றவர்களின் புரிதலுக்காக ஏற்றி வைக்கப்பட்ட ‘நாமம்’ (பெயர்) என்றே கூறலாம்.
உண்மையிலேயே,
அந்த பேருணர்வு பெரு நிலைக்கு, நாம, ரூபங்கள் எல்லாம் கிடையாது.
அந்த
நாம, ரூபங்களின் வாயிலாக அறிவை அறிய எடுத்துக் கொண்ட முயற்சி, அறியாமையில் கொண்டு சென்று
விட்டதினால், உண்டான சந்தேகத்தில் எழுந்த கேள்விக்கு விடை காண வேண்டிய கட்டாயம் உண்டாகி
விட்டது.
அதிலே, பிரம்மம்
என்பது என்ன?
என்ற
கேள்வி எழும் பொழுது, அதற்கு அவர்கள் தந்த பதில், ‘ப்ரக்ஞானம் பிரம்ம’ என்பது மட்டும்தான்.
அதாவது, அறிவுணர்வுதான் (Consciousness) பிரம்மம்.
அதுவே முழுமுதற்பொருள்.