வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஞானியின் கல்

 ஞானியின் கல்


புத்தகம் 👈

அமுரி எனும் அமிர்தம் உட்கொண்டு தமது உடலை காய சித்தியால், ஒளியுடலாய் மாற்றி, சொரூப சித்தி அடைந்து, பிறவாப்பெரு நிலை பெற்றவர்களில் ஒருவரே நமது வள்ளல் பெருமான் ஆவார்.

 பொதுவாக பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும் பொது விதி ஆகும். இதிலே, பஞ்ச பூதங்களால் பரு உடல் கொண்டு பிறந்த மனிதன் மட்டுமே பிறப்புக்கு பின் வரும் இறப்பை வென்று, சொரூப சித்தி பெறுவது சாத்தியம் என்பதை சாகாக்கல்வி கற்ற நம் தமிழ் சித்தர் பெருமக்கள் மூலமாக அறிய முடிகின்றது.

 அவ்வாறு சாகாக்கல்வி கற்றவர்கள், இந்த ஸ்தூல உடலை அவர்கள் விரும்பிய காலம் வரையிலும் வைத்துக் கொண்டிருந்துவிட்டு, வேண்டாம் என்று கருதினால், அந்த உடலுடன் மண்ணில் சமாதி ஆவதும், அல்லது உடலைப் பிறர் கண்களுக்கு புலப்படாது மறைத்து வாழ்தலும் என எல்லா விதமான திறன்களைக் கொண்டவர்கள் நம் சித்தர்கள் எனலாம்.

 இப்படிச் சித்தர்களது வழி முறையில் கூறப்பட்ட, அதி அற்புதமான 'சாகாக்கல்வி' முறையை, தாங்கள் பெற்ற அனுபவத்தைக் கருணை வயப்பட்டு, மற்றவர்களும் அறியும் படி, அழகிய தமிழ்ப் பாடல்களில் பாடியும், எழுதியும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

      சித்தர்களது பாடல்கள் மூலமாக, நாம் பல துறைகள் பற்றிய விவரங்களையும் பெறமுடியும். அதிலே மிகவும் முக்கியமானது, உடலுடன் கூடிய முக்தியைப் பெறும் வழி முறையாகிய சாகாக்கல்வி என்பது ஆகும்.

      நம்முடைய நவீன கல்வித் திட்டத்தின் வாயிலாக, நாம் ஏற்றி வைத்துக் கொண்ட ஏகப்பட்ட எண்ணங்களால், எதையுமே ஏற்க மனமின்றி, நமக்கு சித்தர்கள் கூறும் சாகாக்கல்வி சாதனைகளைப் பற்றி ஆராயவும், அதற்கான பொறுமையும் சிறிதும் இல்லை.

      இதனாலேயே, இன்றும் நம்முடன் உடலோடு வாழ்ந்து வருகின்ற பல சித்தர் பெருமக்களைப் பற்றிய உண்மைகளை நாம் சரியாக உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை.

    சித்தர்களைப் பற்றிய விவரங்களைக் கூறும் போது, அகத்தியர் உட்பட, அனைத்து சித்தர்களும், சாகாக்கலையை அறிந்தவனது சுவாசம், முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப் பற்றி மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.

      காயசித்தி பெற்றவரது சுவாசம் சுழுமுனையால் தான் நடக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் போன்று உடலில் சுவாசம் நிகழாது, என்பதாக ஒரு அற்புதமான விபரத்தைத் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல பசி, தாகம், உறக்கம் ஆகியனவும் மாறிப்போகும் எனவும் கூறுகின்றனர்.

      இப்படி எல்லாம் சித்தர்களது உடலில் ஏற்படும் மாற்றம் எப்படி ஏற்படுகிறது?

      எதன் மூலமாக அந்த மாறுதல்களை அவர்களால் அடைய முடிகிறது?

    என்பதை அறியும் பொழுது, அவர்கள் காயசித்தி எனும் முறையில் அமுரி என்னும் கற்ப மருந்தைக் கண்டறிந்து, அதனைக் கொண்டு முப்பு முடித்துள்ள காரணத்தினால், அவர்களால் இவ்வாறு இருக்க முடிகின்றது என்பதை அறிய முடிகின்றது.

புதன், 11 நவம்பர், 2020

மனமடங்கும் மார்க்கம்

 


                    ↑ இந்த புத்தகத்தை மேலே உள்ள இணைப்பை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாயை நம் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்று சிந்திக்க வேண்டும்.

 நேற்று ஒரு விசயத்தைப் பற்றி ஒரு மாதிரி சிந்தித்தவன். இன்று அதே விசயத்தைப் பற்றி வேறு விதமாக சிந்திக்கிறான்.

 ஒரு உணர்ச்சியால் மனிதன் தவறு செய்கிறான். மற்றொரு உணர்ச்சியால் இறைவனை பக்தி செய்கின்றான்.

ஒரு நேரம் ஒருவனுக்கு உதவி செய்கின்றான், மறுநேரம் மற்றொருவனுக்கு தீங்கு செய்கின்றான். மேலும் அதை எண்ணி வருந்துகிறான். இரண்டும் ஒரே மனிதனே.

 நல்லதாக சிந்திப்பதும், மாறாக கெட்டதாக சிந்திப்பதும் ஒருவனே.

எண்ணங்களின் நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறும் குணத்தை அறிந்துக் கொண்டால், நாம் அதன் பிடியில் எவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளோம், கட்டுண்டு உள்ளோம் என உணர முடியும்.

 ஒரு மனிதன் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறான். அப்போது முதியவர் ஒருவரை சந்திக்கிறான். எப்படியோ அவன் மனதை அறிந்து கொண்ட அந்த முதியவர் இன்று இரவு மட்டும் தூங்கி எழுந்து, நாளை நீ தற்கொலை செய்து கொள் என்று கூறுகிறார்.

  அவனுக்கு வேறு ஆறுதலோ, அறிவுரையோ எதுவும் அவர் கூறவில்லை. அன்று இரவு அவனுக்கு வயிறார உணவு கொடுத்து தங்க இடம் தருகிறார். நன்கு சாப்பிட்டு இரவு நன்றாக உறங்கி எழுகிறான் அந்த மனிதன்.

 மறுநாள் காலையில் அவனுக்கு சாக வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் நீங்கி விட்டது.

 அவனிடம் சரியாக வாழ்வதற்கு ஏற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. பழைய வாழ்வில் தோல்வி உண்டானதற்கு காரணமானவற்றை ஆராய்கிறான். இது தான் எண்ணங்களின் குணம்.

 ஒரு நாள் நல்ல மழை. ஒரு மனிதன் குடையுடன் நடந்து செல்கிறான். வழியே வயதான ஒரு ஏழைப் பெண்மணி மழையில் நனைவதைப் பார்க்கிறான். அவள் மேல் அவனுக்குக் கருணை பிறக்கிறது. தன் குடையைத் தரலாம் என்று எண்ணியவன், பக்கத்தில் தானே தன் வீடு இருக்கிறது, ஆகவே நானும் நனையாமல் அங்கே போய் வேறொரு குடை கொண்டு வந்து தரலாம் என்று எண்ணி வீட்டுக்கு போகிறான்.

குடையும் எடுத்து விட்டான். இப்போது வேறு விதமான எண்ணங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. வீட்டில் மொத்தம் மூன்று குடைகள்தான் உள்ளது. நாமோ மொத்தம் நாலு பேர் உள்ளோம். 

 அவசரத்திற்கு குடை வேண்டும் என்றால் என்ன செய்வது?

 ஒரு குடை 200 ரூபாய் ஆகும். சரி விடு! நம்மை எதிர்ப்பார்த்தா, அந்த கிழவி இருக்கிறாள். என்று எண்ணிக் கொண்டு வேறு வேலையை பார்க்கப் போய் விட்டான்.

எனவே, கருணை வந்தபோது ஒரு எண்ணம், சுயநலம் வந்தபோது ஒரு எண்ணம். இரண்டு எண்ணங்களும் ஒரே மனிதனுக்கு உண்டாயின.

 இதுதான் எண்ணங்களின் வலிமை. இதுவே மாயை.

 நம்மை ஒன்றுபோல் எண்ண விடாமல், எதையாவது, மாற்றி, மாற்றி எண்ணத்தோன்றும் எண்ணங்களின் தொகுப்பே மனம் எனும்போது, இதுதான் மாயை என்று அறிவதற்காக, அதே மனதை விசாரம் செய்யப்பட வேண்டும்.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

முப்பூ இரகசியம் (அகமும் - புறமும்)

முப்பூ இரகசியம் புத்தகம் 👈

 ↑  புத்தகம் பதிவிறக்கம் செய்ய இந்த லின்கை அழுத்தவும்.




படைப்பிலுள்ள எல்லா உயிர்களும் அகரத்தில் தொடங்கி, உகரத்தில் உழன்று, மகரத்தில் அடங்கும் தன்மை உடையவை.

 பிழைப்பு சார்ந்த சமூக வாழ்வில் சிக்கியுள்ள உயிர்கள், அன்னையின் கர்ப்பத்தில் (அகரம்) தொடங்கி, உலக வாழ்க்கையில் (உகரம்) உழன்று, மரணத்தின் பின் மண்ணுள் (மகரம்) அடங்கும். படைப்பிலுள்ள உயிரானது உயிர்மெய் (ஞானோதயம்) அறிந்து, வீடுபேறு என்ற முக்தி நிலையை அடையும் வரை, இத்தகைய பிறப்பு-இறப்பு சுழற்சி தொடரும்.

 ஆன்மீகப் பாதையில் செல்லும் சாதகர்கள், அ(கரம்) + உ(கரம்) + ம(கரம்) என்பது படைத்தலின் ஆதாரமானது ஓங்காரம் என்ற பிரணவ ஒலி என்பதை அருளால் அறிந்து, படைத்தவனின் ஒலி வடிவமாகிய (நாதப்பிரம்மம்) அதனுடன் படைப்பாகிய நமது அதிர்வுகள் (vibration) ஒத்திசைவு (resonance) அடைவதற்கான பயிற்சிகளின் மூலம், படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்ற அறியாமையால் விளையும் இருமை நிலையைக் கடந்து, ஓங்காரத்துடன் ஒன்றி, பிறப்பு -இறப்பு என்ற சுழலிலிருந்து விடுதலை பெறுவதையே மனிதராகப் பிறவியெடுத்தலின் பயன் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் துவக்க வேண்டும்.

புதன், 21 அக்டோபர், 2020

வெட்டவெளி இரகஷியம்

              



                எதனுடனும் மதிப்பிடமுடியாத மகத்தான பூஜ்ஜியமே பூரணம், அந்த பூரணமே ப்ரஹ்மம். ப்ரஹ்மமே வெட்டவெளி. அந்த வெட்ட வெளியே “நான்” என்று அறிந்துக் கொண்டால், அந்த அறிவே ‘சித்’. அது நடனமாடும் உணர்வுவெளிதான் (அம்பலம்). அதுவே சிற்றம்பலம்.

            இதைத்தான், சித்தாகிய இறைவன் (திரு) நடனமிடும் ஆகாயமே (அம்பலமே) ‘திருச்சிற்றம்பலம்’ என்று அறிக.
            அதைவிடுத்து, வெறும் வாய் வார்த்தையினால், ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறிக் கொண்டிருப்பது இறைவனை அறியாத மூட பக்திக்கு ஒப்பாகும்.
            இந்த அறிவு ஆகாசத்தில் (சிதாகாசத்தில்) விழித்துக் கொண்டவருக்கு, உள்ளும், புறமும் ஒன்றேயான ‘வெட்டவெளி’ மட்டும்தான் முழுமை.
            அந்த முழுமையே இறைவன். அந்த இறைவன் சொரூபமே என் உண்மைச் சொரூபம் என்று அறிய முடியும்.
            வெட்டவெளி பூஜ்ஜியம், சூன்யம், ப்ரஹ்மம், அறிவு என்பதெல்லாம் வெறும் நாமங்கள் (பெயர்கள்) மட்டுமே.
            நாமங்களிலும், ரூபங்களிலும் சிக்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து, அந்த ஏக இறைவனை நம் நேரடி அனுபவமாக்குவது எவ்வாறு? என்று அறிவதே பகுத்தறிவு படைத்த மனித தேகத்தின் மகத்துவம் என்றும் அறிக.
            நாமமும், ரூபமும் இல்லாத அந்த அன்பு உணர்வு வெளிப்படுகின்றது அல்லவா? அது மட்டுமே தூய்மையான பேருணர்வு. அதுவே சத்தியம், நித்யம், அனந்தம், அகண்டம், ஆனந்தம்.
            அந்த உணர்வு மையம் விழிப்படைய வேண்டுமானால், தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்ற, இருமைகள் அற்ற அபேத அன்பே, உண்மையான தூய அன்பு. அந்த அன்பு வெளிப்படுவதே ஆன்மாவின் நேரடி அனுபவம்.
            அது நம்முடைய இயல்பு, அது நம்முடைய சொரூபம். அது நம்முடைய உணர்வு. அது நம்முடைய அறிவு.
             நமக்கு வேறாக எதுவுமே கிடையாது. இருப்பதாகத் தெரிவதெல்லாம் உள்ளுணர்வின் அறிவுப் பிரகாசம். அதாவது, அனைத்தையும் அறியும் அறிவு. அதுவே நான்.
            அந்த “நான்” இருப்பதினாலேயே, அனைத்தையும் அறிய முடிகின்றது.
            அதாவது எனது உணர்வு மையமே அவ்வாறு அனைத்தையும் என்னுள்ளேயே அறிகின்றது. அது எனக்கு வேறாக எப்பொழுதும் இல்லை.
            இதை ஒரு எளிய உதாரணத்தின் முலம் அறியலாம்.
            அதாவது, ஒன்றுமற்ற வெள்ளைத்திரை ஒன்று உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால், அதன்மீது ப்ரொஜெக்டரில் இருந்து வெளிப் படுகின்ற படம் ஓடுகின்றது, அது வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது. அதிலேயே அனைத்து காட்சிகளுமே காணப்படுகின்றது.
            அதாவது, சண்டை, சோகம், காதல், கோபம், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது. மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளைத் திரை எதனாலும் பாதிக்கப்படாதது. தூய்மையானது. தன்னில் தானாய் இருப்பு கொண்டுள்ளது. அது இருப்பதினால்தான் அதன் மீது படம் ஓடுகின்றது.
            இதுவரை கூறப்பட்டது, ஒரு திரையரங்கத்தில் உள்ள ஜடமான வெள்ளைத் திரையைப் பற்றியதாகும்.

            இனி, ஆன்மா என்றொரு வெள்ளைத்திரை உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால் அதற்கு அறிவு உண்டு. அதன் வயிலாகவே, அதன்மீது ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்கள் என்ற பிலிம் ரோல்கள் வாயிலாக, மனம் என்ற ப்ரொஜக்டரில் இருந்து படங்கள் (எண்ணங்கள்) வெளிப்படுகின்றது.
            அந்த ஆன்மா என்ற கலங்கமற்ற, தூய்மையான வெள்ளைத்திரையின் மீது அந்த படங்கள் ஓடுகின்றது,
            அதிலே காட்சிகள் விரிகின்றது. சண்டை, சோகம், காதல், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த வெள்ளைத் திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது.
            மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளை நிறமுடைய ஆன்மத் திரையோ எதனாலும் பாதிக்கப்படாதது, தூய்மையானது. அது தன்னில் தானாய் இருப்பு கொண்டது. அது இருப்பதினால்தான் அதன் மீது மனம் என்ற எண்ணங்கள் படமாக ஓடுகின்றது.
            ஆனால், இந்த ஆன்மத் திரை அறிவுடையது, உணர்வுடையது. ஆதலால், இதற்கு வேறாக எதுவுமே அங்கு திரையிடப்பட முடியாது.
            அனைத்தையும் அது சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது. அனைத்து அனுபவங்களும் அந்த ஆன்ம திரைக்கு உண்டாவதுப் போன்று காணப்படுகின்றது.
            ஆனால், அதற்கு உண்டாகும் அனுபவங்கள் அனைத்துமே அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட ப்ரொஜெக்டரில் இருந்து (மனதில்) வெளிப்படுகின்ற படங்களைச் சார்ந்தது.
            ஆனால், அந்த படங்கள் அந்த ஆன்மாவை (திரையை) பாதிக்காது.
            அந்த வகையிலே, இங்கும் அந்த மனமே அன்பு (பக்தி) செய்கின்றது. அந்த அன்பு (பக்தி) சுய நல அன்பாக இருந்தால், அந்த மனம் தன்னை அறிய முடியாமல் அல்லல் படுகின்றது.
            அதுவே, தனக்கு வேறாக ஒன்றுமே இல்லை என்ற அடைந்த அறிவால், அதாவது ஆத்ம ஞானத்தின் வாயிலாக, அதே மனம் தனக்கு வேறாக எதையும் பார்க்காமல், அனைத்தையும் தன்னில் தானாய்ப் பார்த்து, அவைகளை அன்பு செய்கின்ற பொழுது, அந்த பக்தி இரண்டற்ற அநன்ய பக்தியாக மாறிவிடுகின்றது.
            இந்த அன்பினாலேயே, அதாவது இந்த அநன்ய பக்தியினாலேயே, ஆன்மாவிற்கு வேறாக பிரதிபிமித்த மனம் மீண்டும் அந்த ஆன்மாவிலேயே தன்னில் தானாய் கரைந்து விடுகின்றது.
            அதன் பிறகு அங்கே, இருப்பு கொண்டிருப்பது வெறுமையான, வெள்ளையான, ஒன்று மற்ற வெட்டவெளி என்ற ஆன்மா (திரை) மட்டுமே. அதற்கென்று, எந்த ஒரு அனுபவமும் கிடையாது.
            அது அசைவற்றது. அனைத்தையும் தனக்கு வேறாக பிரதிபிம்பித்துப் பார்க்கின்ற அறிவு மட்டும் உடையது.
            அதுவே இறைவன்! அதுவே ஆன்மா! அதுவே நான்!
            இதுவே ஆன்ம அனுபவம், இதை அடைவதே ஆனந்தம்.
            இதை அறிவதே அறிவு.


ஓம் தத் சத்!

வியாழன், 8 அக்டோபர், 2020

குருவாய் வருவாய்


சாஸ்திரத்தின் வாயிலாக உபதேசித்து, தன்னை தனக்குக் காட்டிக் கொடுத்த ஆத்ம ஞானம் என்ற மிகப் பெரிய சொத்தை கொடுத்த சத் குருவிடம், ‘எவனுக்கு ஈஸ்வரனிடம் உத்தம பக்தி இருக்கின்றதோ, அதைப்போன்றே மாறாத உத்தம பக்தி சத்குருவிடமும் வைக்கப்படுகின்றதோ, அந்த மஹாத்மாவுக்கு மட்டுமே தத்வார்த்தங்கள் எல்லாம் தானாகவே பிரகாசிக்கும்’ என்பதை, ஸ்வேதாஸ்வதர உபநிஷத்து மற்றும் குரு கீதை என இரண்டிலும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யஸ்ய தேவே பராபக்திர் - யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந: ||

 


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

கீதாசாரத் தாலாட்டு

 

கீதாசாரத் தாலாட்டு


புத்தகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


கீதாசாரத் தாலாட்டு

(நூலாசிரியர்: திருவேங்கடநாதர்)


முகவுரை


இந்த கீதாசாரத் தாலாட்டு என்ற நூல், திருவாமாத்தூர் ஸ்ரீ திருவேங்கடநாதர் அருளியது.

 அற்புதமான தாலாட்டுப் பாடல்களைக் கொண்ட இந்த நூல், குழந்தையைத் தூங்க வைப்பதற்காக, அதைத் தாலாட்டும் பொருட்டு, பகவத் கீதையின் ஞான யோகத்தின் சாரமான தத்துவ விளக்கங்களை எளிமையான தாலாட்டுப் பிரபந்தமாகக் கொடுத்து, பாமரரும் பயின்று அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நல் நோக்கினில், இந்த நூலாசிரியர் தாலாட்டுப் பாடல்களாக வெளிப்படுத்தி இருப்பது, அவரது உயர்ந்த ஆன்ம ஞான சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.

 இந்த நூலிலே அர்ஜுனன் ஸ்ரீ கண்ணபிரானிடம் ஆன்ம ஞான தத்துவங்களை சந்தேகம் கேட்பதுப் போன்றும், அதற்கு பகவான் ஸ்ரீ கண்ணன் பதில் அளிப்பதுப் போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் வாயிலாக மெய்ஞ்ஞானத்தை அடைய விரும்புகின்ற ஆர்வமுள்ள முமுக்ஷுக்கள் தங்களுக்கு உண்டாகின்ற பல்வேறு சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.

 அனைவரும் இந்த நூலைக் கற்று, என்றும் அழியாத அந்த ஆன்மாவாகவே நான் இருக்கின்றேன் என்ற மெய் ஞானத்தை அடைந்து, தன் சொரூபத்தில் நித்தமும் நின்று, நிலையான பேரின்பத்தை பெற்றிட வேண்டும் என்பதற்காக, தமிழ் வேதாந்த பாடங்களைக் கொண்ட, இந்த தாலாட்டுப் பாடல்களை, எளிய தமிழ் உரை நடையில் விளக்கம் அளித்து, இன்றைய இளைய தலைமுறை மாணவர்களும் எளிதாகக் கற்றுக் கொள்ள ஏதுவாக இந்த நூல் விளக்கப்பட்டிருக்கின்றது.

 இந்த நூலை முழுமையாகக் கற்று முடித்தவர்கள், நிச்சயம் மெய்ஞ்ஞானத்தை அடைந்து, பிறவாப் பெரு நிலையை அடைவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 ஆகவே, அனைவரும் கற்று பயன் அடைய வேண்டும் என்பது, ஈஸ்வர சங்கல்பமாக இருப்பதினாலேயே, இந்த நூல் தற்பொழுது தங்கள் கைகளில் கிடைத்திருக்கின்றது.

 நன்றி,

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


நாநா சீவ வாதக் கட்டளை

 


புத்தகம்    👈 

புத்தகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நூல் விளக்கம்

 

இந்த நூலின் தலைப்பு நாநா சீவ வாதக் கட்டளைஎன்று இருப்பதற்குக் காரணம், ஆன்ம சொரூபமான தன்னிடத்தில் அறியாமையினால், தன்னை, கர்தா, போக்தா, ஞாதா என்றவாறு, அதாவது செயல் செய்பவன், செயலை அனுபவிப்பவன், அனைத்தையும் அறிந்தவன் என்ற பல வாறான (நாநாவித) சீவ தத்துவங்களை தன் மீது ஏற்றி வைத்துக் கொண்டு, தன்னை ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்களினால் சூழப்பட்டு, தன் உண்மை சிவ சொரூபத்தை பிரகாசிக்க முடியாமல் களிம்பு ஏறிய களங்கத்துடன் சீவர்கள் காணப்படுகின்றார்கள்.

எவ்வாறு, தங்கம் போன்று பளபளப்பாக மின்னக்கூடிய பிரகாசமான செம்பு, களிம்பு ஏறியவுடன் கறுத்து காணச் சகியாதவாறு, தன் உண்மைப் பிரகாசமான, இயல்பு சொரூபத்தை இழந்து காணப்படுகின்றதோ, அவ்வாறே இந்த சீவர்களும் அறியாமையினால் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட பலவாறான மலங்களினால், தங்கள் உண்மையான சுயம் பிரகாசத்தை இழந்து, ஏறிய களிம்பினால் களங்க மடைந்து காணப்படுகின்றனர்.

எவ்வாறு, ஒரு உலோகமான செம்புவில் களிம்பு ஏறிய அழுக்கினை வேதி வினைக்கு உட்படுத்தும் பொழுது, அதன் உண்மைத் தன்மையான தங்கம் போன்ற அதன் சுயம் பிரகாசம் வெளிப்படுகின்றதோ, மேலும், அதை வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு வேதியியல் வல்லுநரான ‘வேதி’ (வேதியியல் இராசயண வல்லுஞர்) தேவைப்படுகின்றாரோ, அவ்வாறே, இந்த சீவர்கள் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட பலவிதமான (நாநாவிதமான) மலங்களான களிம்பினை, தன் ஞானத்தினால் வேதிவினைக்கு உட்படுத்தி, அவர்களது உண்மை சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர, சத்குரு என்ற ஒரு வேதிவேண்டியதாக இருக்கின்றது.

அவர், இந்த சீவர்கள் அறியாமையினால் ஏற்றி வைத்துக் கொண்ட பலவாறான சீவ தத்துவங்களை நீக்கும் பொருட்டு, அவர்களது அறியாமையை சுட்டிக் காட்டி, அவர்களது மனதில் ஏற்றி வைத்துக் கொண்ட மலங்களை, தன்னுடைய ஞானம் என்ற இரசாயணத்தினால், வேதியல் விளைவுக்கு உட்படுத்தி, சீவர்களது உண்மை சொருபத்தை வெளிப்படுத்தி, அவர்களை தங்களது உண்மைச் சொரூபத்தில் பிரகாசிக்கச் செய்கின்றார்.

அந்த வகையிலே, இந்த நாநா சீவ வாதக் கட்டளைஎன்ற நூலுக்கு பொருள், சீவர்களின் பலவாறான மலங்களை போக்கும் வேதியல் விளைவுக்கு உட்படுத்தும் வாதியாக இந்த சத்குரு இருந்து, தனது உபதேசத்தால் இந்த சீவர்கள் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட மலங்களை (மன அழுக்குகளை) நீக்கும் கட்டளை (உபதேசம்) என்பதாக இந்த நூல் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒரு வேதியானவன் செம்பு மீது உள்ள களிம்பை வேதித்து, அதன் உண்மை சொரூபமான தங்கம் போன்ற பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றானோ, அதுப்போன்று, இந்த சீவர்கள் மீது ஏற்றி வைத்துள்ள அனேக களிம்புகளான, கர்த்தா, போக்தா, ஞாதா என்ற பல்வாறான சீவ தத்துவங்களை தன் மீது ஏற்றி வைத்துக் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டி, அந்த பலவாறான சீவ தத்துவங்களிலிருந்து, அந்த சீவனை விடுவித்து, ஏக தத்துவமான அதுவாகவே நீ இருக்கின்றாய் என்ற ஆன்ம தத்துவத்தை உபதேசித்து, சீவனின் உண்மை சொரூபத்தை, சுயம் பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றார்.

அந்த வகையிலே, இந்த நாநா சீவ வாதக் கட்டளைஎன்ற நூல், பலவாறான அறியாமைகளை ஏற்றி வைத்துக் கொண்டுள்ள சீவர்களை தன்னுடைய உபதேசக் கட்டளையினால், அவர்களுக்குள் இரசவாதத்தை ஏற்படுத்தி, வேதித்து, தன் உண்மை சொரூபத்தை வெளிக் கொண்டு வருகின்ற சாதனமாக அமைந்துள்ளது.

எந்த ஒரு ஜடப்பொருளான உலோகமாக இருக்கட்டும், உயிர் பொருளாக இருக்கட்டும், அவைகள், தன்னைப் பற்றிய உண்மைத் தன்மையை தானாகவே என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது.

அறியாமையிலே இருக்கின்ற அந்த சீவனை, அது செய்த புண்ணியங்களின் அடிப்படையில், முழுக்க முழுக்க ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகி, அதன் வாயிலாக, தக்க சத்குருவின் சந்நிதியில் கொண்டு சேர்த்து, அவர் வாயிலாகவே தன் உண்மை சொருபத்தை அறிந்துக் கொள்ள வைக்கும்.

பொதுவாக, எல்லா ஜடப் பொருட்களும், உயிர் பொருட்களும் தங்கள் உண்மை இயல்பினை, தாங்களாகவே இந்த உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொள்ளாது.

எதற்கு, அதன் முன்வினைப் பலன்களால் ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகின்றதோ, அப்பொழுது மட்டுமே உலோகம் போன்ற ஜடப் பொருளாக இருந்தாலும், மனிதன் போன்ற உயிர் பொருளாக இருந்தாலும், ஈஸ்வரனின் விருப்பத்தின், ஆணைப்படியே இந்த உலகத்தின் வெளிப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, மற்றவர்களுக்கு பயன் படுகின்றது.

அந்த வகையிலே, ஒரு உலோகம் தன் களிம்புகள் (அழுக்குகள்) நீங்கி, தன் உண்மை சொரூபத்தில் பிரகாசிக்க ஒரு வாதி எப்படி அவசியமோ, அப்படியே ஒரு சீவன் தன் களிம்புகள் (அழுக்குகள்) நீங்கி தன் உண்மை சொருபத்தில் பிரகாசிக்க ஒரு சத்குரு மிகவும் அவசியம்.

ஒரு இரசவாதி செம்பு போன்ற உலோகத்திற்கு கிடைத்து, அதனைப் பிரகாசிக்கச் செய்வது என்பதுவும், ஒரு சத்குரு சீவனுக்கு கிடைத்து அவனை பிரகாசிக்கச் செய்வது என்பதுவும், தானாகவே நடைப்பெற்று விடாது.

அதற்கு பல கோடி சென்மங்களாக அந்த சீவன் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலே மட்டுமே, அதற்கு ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகி, தக்க ஆசானாக ஜடப்பொருளுக்கு ஒரு இரசவாதியோ, உயிர் பொருளான சீவர்களுக்கு ஒரு சத்குருவோ கிடைக்க முடியும்.

அனைத்து செம்பு உலோகங்களும் மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, தன் உண்மை சொரூபத்தில் பிரகாசித்து இந்த உலகத்திற்கு பயன்பட்டு விடாது.

அதுப்போன்ற, எல்லா சீவர்களும் மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, தன் உண்மை சொரூபத்தில் பிரகாசித்து, இந்த உலகத்திற்கு ஜீவன் முக்தனாக பயன்பட்டு விட முடியாது.

அவ்வாறு உலகத்திற்கு பயன்பட வேண்டுமானாலும், அதனை இரசவாதத்திற்கு உட்படுத்துபவன் சாக்ஷாத் அந்த சர்வேஸ்வரனைத் தவிர வேறு ஒருவராலும் ஆகாது.

அதனால்தான் இதை அறிந்துக் கொண்ட அன்றைய மகான்கள் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துஎன்று பாடிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

ஆகவே, இந்த நூலைப் படிக்கின்ற அதிகாரி யாராக இருக்க வேண்டும், இந்த நூலிலே கூறப்பட்டுள்ள விசயம் யாருக்குப் போய்ச் சேர வேண்டும், இந்த நூலைப் படிக்கின்றவர்களுக்கும், இந்த நூலுக்கும் எப்படிப்பட்ட சம்பந்தம் உண்டாக வேண்டும், இந்த நூலைப் படிப்பதினால் உண்டாகும் பிரயோஜனம் என்னவாக இருக்க வேண்டும் என்ற அனைத்தையுமே அந்த ஒரே ஒருவன்தான் தன்னில் தானாக இருந்து இவைகளைத் தீர்மானிக்கின்றான்.

அந்த வகையிலே, இந்த நூலைப் படிக்க ஆர்வத்துடன் வந்திருக்கின்ற அதிகாரிகளான முமுக்ஷுவுக்கு, இந்த நூலை முழுமையாக படித்து முடிக்க, எந்தவிதமான விக்னங்களும் உண்டாகாமல், விக்னங்களை நீக்கி அருளுகின்ற விநாயகப் பெருமானின் ஆசிப்பெற்று, இந்த நூல் வாசிக்கப்படுகின்றது.

 

 நன்றி!

 

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதன், 2 செப்டம்பர், 2020

அநுபந்த சதுஷ்டயம்

 ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் ஸ்ரீ பரமாத்மனே நம:

பராவித்யா வழங்கும்

“தன்னை அறியும் தமிழ் வழி வேதாந்த பாடங்கள்”

அநுபந்த சதுஷ்டயம்



பாடங்களைப் பற்றி அறிய மேலே “புத்தகம்” என்ற இணைப்பை அழுத்தி இந்த நூலைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 


நன்றி!

தன்னை அறியும் தமிழ் வழி வேதாந்த பாடங்கள் (முகவுரை)

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் ஸ்ரீ பரமாத்மனே நம:


பராவித்யா வழங்கும்

“தன்னை அறியும் தமிழ் வழி வேதாந்த பாடங்கள்”


(முகவுரை)




விபரம் அறிய மேலே உள்ள “பாடங்களைப் பற்றிய முகவுரை" என்ற  இணைப்பை அழுத்தவும்.  

நன்றி! 

தன்னை அறியும் தமிழ் வழி வேதாந்த பாடங்கள் (அறிமுகம்)

 ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் ஸ்ரீ பரமாத்மனே நம:

பராவித்யா வழங்கும்

“தன்னை அறியும் தமிழ் வழி வேதாந்த பாடங்கள்”

அறிமுகம்



வகுப்புகள் அறிமுகம் விளக்கம்   👈


விபங்களை அறிய “வகுப்புகள் அறிமுகம் விளக்கம்” என்ற இணைப்பை அழுத்தவும். 

அறியாமை

 அறியாமை (மின் நூல்)

=====================




அறியாமை (புத்தகம்)  👈


நம்முடைய பார்வையில் இன்று இந்த உலகம் எப்படி இருக்கின்றது?

யோசித்துப் பார்த்தீர்களேயானால், மிகவும் துக்கம் நிறைந்ததாக காணப்படுகின்றதா? அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படுகின்றதா?

கூறுங்கள் பார்க்கலாம்?

இந்த உலகம் மிகவும் துயரம் நிறைந்ததாகவும், அமைதி குறைந்ததாகவும் காணப்படுகின்றது என்று நீங்கள் கூறினீர்களேயானால், நிச்சயம் நீங்கள் அமைதியை இழந்து, துயரத்துடன்தான் இன்றுவரை காணப்படுகின்றீர்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அதுவே, நீங்கள் இந்த உலகம் முழுவதும் அமைதியாகவும், ஆனந்தம் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்று கூறமுடியுமானால், நீங்கள் அமைதியின், ஆனந்தத்தின் இருப்பிடம் என்று அறிந்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால், இது எத்தனைப் பேருக்குத் தெரியும்!

ஆம், இது அவரவர்களின் மனதினால் உண்டாகின்ற உலகம்.

அவரவர்களின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல, இந்த உலகத்தைப் படைத்துக் கொள்கின்றோம்.

அதற்கேற்றவாறு காண்கின்றோம்.

இவ்வாறு படைக்கப்பட்ட உலகிலே மனிதனுக்கு உண்டான மரணபயம் இருக்கின்றது அல்லவா?

அதுவே, அவனது அறியாமை என்பதை நன்கு அறிந்துக் கொண்ட சிலர், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, மற்றவர்களிடம் பணம் பறித்துக் கொண்டிருக்கின்றார்கள்?

அவர்கள் மனதில் படைத்துக் கொண்ட உலகம் அப்படி! அதனால் அவர்களைப் பொறுத்தவரையில் ஏமாளிகள் நிறைந்த உலகம் இது.

யோசித்துப் பாருங்கள்!

உண்மையிலேயே மரணம் யாருக்கு இல்லை?

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்