முப்பூ இரகசியம் புத்தகம் 👈
↑ புத்தகம் பதிவிறக்கம் செய்ய இந்த லின்கை அழுத்தவும்.
படைப்பிலுள்ள எல்லா உயிர்களும் அகரத்தில் தொடங்கி, உகரத்தில்
உழன்று, மகரத்தில் அடங்கும் தன்மை உடையவை.
பிழைப்பு சார்ந்த சமூக வாழ்வில் சிக்கியுள்ள உயிர்கள், அன்னையின்
கர்ப்பத்தில் (அகரம்) தொடங்கி, உலக வாழ்க்கையில் (உகரம்) உழன்று, மரணத்தின்
பின் மண்ணுள் (மகரம்) அடங்கும். படைப்பிலுள்ள உயிரானது உயிர்மெய் (ஞானோதயம்)
அறிந்து, வீடுபேறு என்ற முக்தி நிலையை அடையும் வரை, இத்தகைய பிறப்பு-இறப்பு சுழற்சி
தொடரும்.
ஆன்மீகப் பாதையில் செல்லும் சாதகர்கள், அ(கரம்) + உ(கரம்)
+ ம(கரம்) என்பது படைத்தலின் ஆதாரமானது ஓங்காரம் என்ற பிரணவ ஒலி என்பதை அருளால் அறிந்து,
படைத்தவனின் ஒலி வடிவமாகிய (நாதப்பிரம்மம்) அதனுடன் படைப்பாகிய நமது அதிர்வுகள்
(vibration) ஒத்திசைவு (resonance) அடைவதற்கான பயிற்சிகளின் மூலம், படைப்பு
வேறு, படைத்தவன் வேறு என்ற அறியாமையால் விளையும் இருமை நிலையைக் கடந்து, ஓங்காரத்துடன்
ஒன்றி, பிறப்பு -இறப்பு என்ற சுழலிலிருந்து விடுதலை பெறுவதையே மனிதராகப் பிறவியெடுத்தலின்
பயன் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் துவக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக