முன்னுரை
சடகம் என்றால் ஆறு என்று பொருள். இது ஆறு ஸ்லோகங்கள் கொண்டது.
இந்தத் தேகம் நானல்ல,
எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி
நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று கூறி, இறுதியில்
எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப்பரமான்மாவுன் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின்
உண்மையை ஆராய்ந்து மிக அழகாக எழுதப்பட்ட இந்த ஆறு ஸ்லோகங்கள் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரால்
இயற்றப்பட்டது.
கயிற்றை
பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் வரை அந்தப் பிரமை நம்மை விட்டு அகலாது. பார்க்கப்படுவது
என்ன என்று முதலில் தோன்ற வேண்டும். அதன் உண்மையை அறிய தேவையான ஒளியும் வேண்டும். அந்த
ஒளியும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும்.
அதே
போன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். உடல்,
மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினசரி அனுபவங்களிலேயே
அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து,
அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள்
கொண்டே அறிய முயற்சிக்க வேண்டும்.
எது நித்தியமோ அதை மட்டும்
பற்றிக்கொண்டு, அநித்தியமானவைகளை அகற்றுவதில் முதல் படியாக உடல் பற்றிய உண்மைகளை இங்கு
அறிகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக