பவானி அஷ்டகம்
==================
பவானி உன்னுடைய அடிமை நான் என்று பக்தன் துதிக்க
ஆரம்பிக்கிறானாம். பவாநி த்வம், பவானி உன்னுடைய, (த்வம் என்றால் உன்) என்று இவன் சொல்லுகின்ற
பொழுதே, அம்பாள் இவனுக்கு பாவானித்வம் என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகின்றாள் என்று
சிலேடை பண்ணுகிறார்.
முதலில்
இவன் பிரார்த்திக்கின்ற போது பவானி என்றால் அம்பாள் என்று வழிபட ஆரம்பிக்கிறானாம்.
பரமசிவனுக்கு
முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி.
மறுபடி,
பவானித்துவம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் பவானித்துவம்
என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, பவானி என்றால் ஆகிவிடுகின்றேன் என்று
அர்த்தம்.
தீர்க்க
சுமங்கலி பவ என்கின்றோமே, இங்கே பவ என்றால் ஆவாய் என்று அர்த்தம்.
பவானி
என்றால் ஆகின்றேன். பவானித்வம் என்றால் நீயாகவே நான் ஆகிவிடுகின்றேன் என்று அர்த்தம்.
எல்லாம்
பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கின்றான் பக்தன்.
தாஸனாக
இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகின்றாள் அம்பிகை என்பதை இங்கு
அறிய வேண்டும்.
பவானி,
உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது
வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், பவானி உன் (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே
அம்பாள் இடைமறித்து, ஆமாமப்பா பவானித்வம்தான் என்கிறாள்.
அதாவது
நானும் நீயும் ஒன்றேதானப்பா என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகின்றாள்.
பவானித்வம்
என்றால் பவானியின் தன்மை என்றும் அர்த்தம்.
பக்தனே
பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகின்றான்.
இதுவே
தன் மயமாதல்! அதுவே தன் சொரூபம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக