ஓம் தத் சத்
ஸ்ரீ திரிபுர ரகசியம்
(ஞான காண்டம்)
முன்னுரை
இந்த அரிய நூலானது, சம்ஸார சமுத்திரத்தில் மூழ்கி
இருக்கின்ற மனிதர்களை அவர்களது பிறப்பு, இறப்பு என்கின்ற துக்கத்திலிருந்து மீட்டெடுக்கும்
பொருட்டு, ஹரிதாயனர் என்ற மகரிஷியால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட திரிபுரையின் மாகாத்மியத்தை
வடமொழியில் இருந்து தமிழில் திருச்செந்தூரை சேர்ந்த திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர்
அவர்களின் அரிய முயற்சியானால் அனைவரும் படித்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நூலை தற்பொழுது அடியேன் எளிய தமிழில் இன்றைய இளைய சமுதாயம் படித்து பயன் அடைய வேண்டும் என்று தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து, பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, “ஸ்ரீ திரிபுர ரகசியம்” என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.
நன்றி!

என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக