ந தத்ர ஸூர்யோ பாதி ந
சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி |
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி |
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||
அங்கே சூரியன் ஒளிர்வதில்லை, சந்திரனும் நட்சத்திரங்களும்
ஒளிர்வதில்லை, மின்னல் ஒளிர்வதில்லை.
இந்த
அக்கினி எப்படி ஒளிர முடியும்?
ஒளிர்கின்ற அறிவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன.
அனைத்தும் அதன் பிரகாசத்தால் ஒளிர்கின்றன.
ஆன்ம அனுபூதி என்பது சாதாரண கண்களால் காணக்கூடிய
ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.
அனைத்தையும்
காண ஒரு விளக்கின் வெளிச்சம் தேவை.
சூரியனைக்
காண விளக்கு தேவையா?
தேவையில்லை.
ஏனெனில் சூரியனின் பிரகாசத்தால்தான் அனைத்தும்
ஒளிர்கின்றன.
அதுபோல, அறிவின் பிரகாசத்தால் நாம் அனைத்தையும்
காண்கிறோம்.
உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்ற சூரியன்,
சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது அறிவுப் பிரகாசத்தால்தான்.
எனவே ஆன்ம (அறிவு) ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால்
இயலாது.
பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது
அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது, அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.
பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல
ஆன்ம ஒளி. அல்லது அறிவுப் பிரகாசம் என்பது.
அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளி என்ற
அறிவுப் பிரகாசத்தால்தான்.
இந்த
ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல.
அதாவது,
பௌதீக ஒளி அல்ல. ஒரு அனுபவம்!
ஆன்ம
அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்.
இது
உணர வேண்டியது. உணர்ந்து அனுபவிக்க வேண்டியது.
மற்ற
புறக் காட்சிகள் போல அதனைக் காண முடியாது.
அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண
முடியாது, அனுபவிக்கவே முடியும்.
அதுப்போல, ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே
தவிர காண முடியாது.
இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக்
கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு என்னுடைய (அறிவுக்கண்) தெய்வீகக் கண்ணைத்
தருகிறேன் என்று கூறுகிறார். (கீதை, 11.8)
அந்த அறிவை (ஆத்மாவை) அறிவது எப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக