பகவத் கீதை
<<<<<<>>>>>>>
அத்தியாயம் - 18, ஸ்லோகம் - 18.
**********************************************
கர்மமும், ஞானமும்.
=====================
ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥
ஜ்ஞாநம்
ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴
கர்மசோத³நா |
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || (18- 18)
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || (18- 18)
அறிவு,
அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா என்று மூன்று விதங்களும் கர்மத்தின் கட்டமைப்பு ஆகும்.
கருவி, செய்கை, கர்த்தா என்று மூன்று விதங்களும் கர்மத்தின் கட்டமைப்பு ஆகும்.
___________________________________________________________________
அறிவு, அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி,
செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் கட்டமைப்பு இந்த மூன்றும் சேர்ந்தது.
அறிவு
(கருவி) - புத்தி.
அறியப்படும்
பொருள் (செய்கை) - புலன்கள்.
அறிபவன்
(கர்த்தா) - மனம்.
இந்த
கட்டமைப்பைக் கொண்டு கர்மாவை நமக்கு வெளியே செய்தால் என்ன நடக்கும், நமக்கு உள்ளே செய்தால் என்ன நடக்கும் என்பதை அறியலாம்.
ஒருவன்
தன்னுடைய வெளி நோக்குப் பார்வையால் புறத்தே காணுகின்ற காட்சியில்,
இதில்
அறியப்படும் பொருளாக புலன் ஒரு ஆப்பிளை சுவைத்து, அறிபவனாக (மனது), அதனை அனுபவித்து,
அறிவு என்ற கருவியைக் கொண்டு, தீர்மானம் செய்தவுடன் மனம் திருப்தி அடைகின்றது.
மனம்
இந்த ஆப்பிளை பற்றியதால், தின்பதற்கான செயலைச் செய்கின்றது.
இதுவே,
“கர்மா” அல்லது “செயல்” எனப்படுகின்றது.
இந்த
செயல்கள் மனம் எதை எதையெல்லாம் பற்றுகின்றதோ, அந்த பற்றுதலுக்கு ஏற்ப செயலைச் செய்யத்
தொடங்கி விடுகின்றது.
இது
மனதின் புறப் பார்வையால் விளைகின்றவை.
இது
அஞ்ஞானிகளின் நிலை.
அடுத்து,
ஒருவன் தன்னுடைய உள் நோக்குப் பார்வையால் உள்ளே காணுகின்ற காட்சியில்,
இதில்
அறியப்படும் பொருளாக உள்ள புலன்களை அடக்கி, அறிபவனான ஆழ் மனதை உள் நோக்கி விசாரித்து,
அதன் வாயிலாக அறிவு என்ற கருவியைக் கண்டு கொண்ட மனம், அதைப் பற்றியவுடன் உண்டாகும்
அனுபவே ஆத்ம அனுபவம் எனப்படும்.
இந்த
அனுபவத்தை அடைந்த மனம் திருப்தி அடைகின்றது.
இனி
மனதிற்கு தேடுதல் வேலை இல்லை.
“எதை அறிந்து கொண்டால்
வேறு எதையும், அறியத் தேவை இல்லையோ, அதை அறிவதே அறிவு”
என்று
அறிந்து கொண்ட மனம் அமைதியாக தன்னை அறிவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடும்.
அதாவது,
அறியப்படும் பொருளாக ஆத்மாவை அறிபவன் (மனது), அதனை தன் சொரூபமாக அறிந்தவுடன் அங்கே
பற்றுவதற்கு ஆத்மாவைத்தவிர எதுவும் இல்லாததினால், மனம் ஆத்மாவை அறிந்து கொள்கின்றது.
இதுவே,
“ஞானம்” அல்லது “ஆத்ம நிஷ்டை” எனப்படுகின்றது.
இது
மனதின் அகப் பார்வையால் விளைந்தவை.
ஆகவே,
புறப்பார்வை என்பது ஊனக்கண்ணினால் உண்டாகி, ஆசையின் காரணமாக கர்மாவில் ஈடுபட வைக்கின்றது.
அதுவே
அகப்பார்வை என்பது மனக் கண்ணினால் உண்டாகி, ஆத்மாவை அறிந்து அங்கே செயல் எதுவுமற்ற
ஆத்ம அனுபவம் உண்டாகின்றது.
இங்கு
செயல் இல்லை. ஞான அனுபவம் மட்டுமே!
இதுவே
சாரம்!
ஆகவே,
புறத்தில்
பார்த்து கர்மாவை சேர்த்துக் கொள்ளலாமா?
(அல்லது)
அகத்தில்
பார்த்து ஆத்ம ஞானத்தை அனுபவிக்கலாமா?
என்பதை
அவரவர்களின் மனதின் சம்ஸ்காரத்தைப் பொருத்து முடியுமா?, முடியாதா என்பதைத் தீர்மானித்துக்
கொள்ளுங்கள்.
ஓம்
தத் சத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக