இன்று
நீ வாழும் வாழ்க்கையை வைத்தே, நீ எந்த மன நிலையில் வாழ்கின்றாய் என்பது உனக்குப் புரியும்.
உன் மனம் இந்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றதா? அல்லது துயரமாக அனுபவிக்கின்றதா?
என்பதை நீயே முடிவு செய்து கொள்.
உன்னுடைய இன்றைய இந்த வாழ்விற்கு காரணம், நேற்று நீ எப்படி வாழ்ந்தாய் என்பதையும், நாளை நீ எப்படி வாழப்போகின்றாய் என்பதற்கு, இன்று நீ எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் என்பதையும் நீ அறிய மறுக்கின்றாய்.
உன்னுள் இருக்கும் உன் மனசாட்சியைக் கேள்! அது உனக்கு உன்னைப்பற்றித் தெளிவாகக் கூறும்.
ஆம்!
நீ செய்கின்ற செயலினால் விளைந்த நன்மை என்ன?
நீ செய்கின்ற செயல்கள் சரியா?, அல்லது தவறா? என்ற எந்தவிதமான அடிப்படை அறிவும் இன்றி, மனம் போன போக்கில், மந்த புத்தியுடன், செக்குமாடு செக்கை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பதுபோல, உன்னுடைய வாழ்க்கை இந்த உலக விஷயங்களிலேயே இருப்பதை நீ அறியவில்லையா?.
மேலும், செக்குமாடு செக்கை சுற்றி, சுற்றி வருவதினால் ஒருவகையில் நம் பயன்பாட்டிற்கு எண்ணையாவது கிடைத்துவிடும், ஆனால், நீ சுற்றும் இந்தச் சுற்றினால் யாருக்கு என்ன நன்மை இதுவரை உண்டானது?
இனிமேல் என்ன நன்மை உன்னால் இந்த சமுதாயத்திற்கும் கிடைக்கப்போகின்றது?

நீயே உன்னைப்பற்றி உண்மையில் அறிந்து கொள்ளவில்லை, நீ எப்படி மற்றவர்களைப்பற்றி அறிந்து கொண்டு அவர்களுடன் சந்தோஷமாக வாழ முடியும்? யாரை ஏமாற்றப் பார்க்கின்றாய்? உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கின்றாய். அதுதான் உண்மை.
காரணம்,
யாருக்காக நீ வாழ்கின்றேன் என்கின்றாயோ, அது உண்மையில்லை, ஏன் எனெனில், உண்மையில் உனக்காகவே
நீ வாழ்கின்றாய், உன்னுடைய சுய நலத்திற்காகவே நீ அனைத்தையும், அனைவரையும் உனக்கு சாதகமாக
மாற்றிக்கொள்கின்றாய்.
ஆம், முழுவதுமாகவே நீ சுய நலத்துடன் செயல் புரிகின்றாய்.. எதைச் செய்தாலும், அதில் எனக்கு என்ன இலாபம் என்ற குறுகிய மனம் கொண்டுள்ளாய். அதற்காக பல குறுக்கு வழிகளை கையாளுகின்றாய்.
உன்னுடைய குறுகிய மனத்திலிருந்து சற்று வெளியே வா! வந்து, பரந்த மனதுடன் இந்த பரந்த உலகத்தைப் பார், இதில் எதை நீ படைத்தாய்?, எது உன்னால் உருவாக்கப்பட்டது?.

உன்னுடைய உடலே உன்னால் உருவாக்கப்பட்டது அல்ல. அந்த உடலிலே இருக்கின்ற புலன்களையாவது நீ படைத்தாயா?
அப்படி நீ படைத்திருந்தால் அந்த புலன்கள் உன் பேச்சை கேட்கவேண்டும் இல்லையா?
ஏன் அவைகள் கேட்க மறுக்கின்றன!.
நீ எதையும்
படைக்கவில்லை, ஆனால் நீ அடைய விரும்புகின்றாய்.
நீ எதையும் படைக்கவில்லை, ஆனால் நீ அனுபவிக்க விரும்புகின்றாய்.
நீ எதையும் படைக்கவில்லை, ஆனால், நீ அழிக்க விரும்புகின்றாய்.
ஏன்? ஏன்?
முதலில், நீ ஓடுவதை நிறுத்தி விட்டு, நின்று சற்று நிதானமாக யோசித்துப்பார்!
நீ யாரென்று உன்னை நீயே கேட்டுப்பார்.
நீ உன்னை யாரென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றாயோ,
அது உண்மையில்லை என்பதும் உனக்குப் புரியும்.
உன்னுள் இருப்பது என்ன என்ற உண்மையும் உனக்குப் புரியும்!
ஏதோ ஒன்று உன்னுள் இருப்பதினாலேயே, இந்த உலகை நீ பார்க்க முடிகின்றது.
ஏதோ ஒன்று உன்னுள் இருப்பதினாலேயே. நீ கேட்க முடிகின்றது.
ஏதோ ஒன்று உன்னுள் இருப்பதினாலேயே, நீ சுவைக்க முடிகின்றது.
ஏதோ ஒன்று உன்னுள் இருப்பதினாலேயே, நீ மணத்தை முகர முடிகின்றது,
ஏதோ ஒன்று உன்னுள் இருப்பதினாலேயே நீ உணர்ச்சியை உணர முடிகின்றது.
ஆம்! அந்த ஏதோ ஒன்று உண்மையில் உன்னிடம் இருக்கின்றது.
அது எங்கும், எதிலும், எப்பொழுதும் இருக்கின்றது.
அது எல்லையில்லாமல் பரந்து, விரிந்து இருக்கின்றது.
அது உன்னிலும், என்னிலும், எல்லாவற்றிலும் இருக்கின்றது.
ஆக அது இன்றி நீ இல்லை! நீ இன்றி அது இல்லை!
இந்த உண்மை உனக்குப் புரிந்துவிட்டால், நீ வந்த நோக்கம் உனக்குப் புரிந்து விடும்.

அப்படி இந்த உண்மை உனக்குப் புரியவில்லை என்றால் நீ மீண்டும், மீண்டும் இந்த பொய்யான உலகிற்கு வர வேண்டியது இருக்கும்.
இங்கு வாழும் வாழ்க்கையும் வீணாக இருக்கும். வாழ்ந்த வாழ்க்கையும் வீணாக முடியும்.
உன்னை நீ உணராத வரை உன்னுடையது என்று இங்கு எதுவுமே இல்லை. ஆனால், உன்னை நீ உணர்ந்து கொண்டாயானால், அனைத்துமே உன்னுடையதுதான் என்ற பேருண்மை உனக்குப் புரியும்.
ஓம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக