வெள்ளி, 12 நவம்பர், 2021

சாதன சதுஷ்டயம்

 

சாதன சதுஷ்டயம்

இந்த நூலைப் படிக்க கீழே உள்ள லின்கினை அழுத்தவும்.

சாதன சதுஷ்டயம் என்ற நான்கு சாதனங்களை விவேகம், வைராக்கியம், சமாதி சட்க சம்பத்தி, முமுக்ஷுத்துவம் என்று அழைக்கப்படுகிறது. இதனை சாதன சதுஷ்டய சம்பத்தி என்றும் அழைக்கலாம்.

  இதில், விவேகம் என்பது இந்த உலக வாழ்க்கையில் எது நிலையானது, எது நிலையற்றது என்பதனைப் பற்றி சிந்தித்து, அதனைப் பற்றிய சரியான புரிதல் உண்டாவதே ஆகும்.

 அடுத்து, இந்த உலக சுகத்தின் மீதும், மறு உலகங்களான சொர்க்க லோகம், பித்ரு லோகம், பிரம்ம லோகம் போன்ற லோகங்களை அடைய வேண்டும், அங்கு சென்று சுகமாக இருக்க வேண்டும் என்ற அறியாமை கொண்ட ஆசைகளை அகற்றுவதே வைராக்கியம் ஆகும்.

 அத்துடன், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், பொறுமை, நம்பிக்கை, ஒருமுகப்படுதல் போன்ற ஆறு நற்பண்புகளை அடைவதே சமாதி சட்க சம்பத்தி எனப்படும்.

 இறுதியில் முக்தியை விரும்புகின்ற உத்தம சாதகனுக்கு உண்டாகும் உண்மையான ஆசையே முமுக்ஷுத்வம் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்