சனி, 7 ஆகஸ்ட், 2021

நான் யாரு?

 

 


புத்தகம்  👈

நான்என்பது என்ன? என்பதை அறிந்துக் கொண்டால் வழிபடுபவன் - வழிபடப்படும் கடவுள் என்ற இருமை நிலைகள் இல்லாமல் போகிறது. 

இதை அறிவுசார்ந்த, மனதைக் கடந்த மகத்தான உணர்வுநிலை எனலாம். 

      அறிவு என்பதாக இதுவரை நாம் அறிந்து வைத்துக்கொண்டுள்ள அனுபவங்களை எல்லாம் கடந்து, சுயவுணர்வை (உள்ளுணர்வை) அறிந்துக் கொண்ட பின்னர், அந்த உள்ளுணர்வாகிய சுயவுணர்வில் ஆழ்ந்துபோகும் அனுபவம்தான் நான் எனப்படுகிறது. 

உடல் அழியும். உடல்சார்ந்த மனம்கூட அழிந்து போகும். ஆனால், இந்த உடலையோ, மனதையோ சார்ந்திராத ஆன்மாவாகிய தன்னுணர்வு (தன்னை அறியும் அறிவு) என்றுமே அழிவற்றது. 

ஆகவே, மனத்தைக் கடந்து உள்ளே சென்றால், உள்ளுணர்வைச் சந்திக்க முடியும். அதை அனுபவமாக அனுபவிக்கவும் முடியும். 

அதை உணர்கிற உள்ளூணர்வே நான்”.  அதன் அனுபவமே நான்”. அதை அறிபவனும் நான்”. 

ஆக, உணர்வு! (சத்), அறிவு! (சித்), அனுபவம்! (ஆனந்தம்), என ஒன்றேயாகிய சத்சிதானந்தம் நான்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்