(சிறு கதை)
இந்த உலக
விவகாரத்தில் வெளிப்படையான உண்மை (Apparently Reality)
என்னவெனில், ஒருவன் ஆசையின் காரணமாக, அறிவற்ற பல காரியங்களைச் செய்து, பணத்தின் பின்னால்
ஓடிக் கொண்டு, தனக்கு நன்மையை மட்டுமே விரும்பும் தாய் கூறும் புத்திமதியை உதாசீனப்படுத்தி,
அந்த தாயையும் அனாதையாக்கி அன்பு இல்லத்தில் சேர்த்து விட்டு, தன் பணத்திற்காகத் தன்
பின்னால் வருகின்ற அற்ப உறவுகளை அவசியம் என்று கருதி, அதன் பின்னே சென்று, அறிய வேண்டியதை
முழுமையாக (Absolute Reality) அறியாமல் அற்ப ஆசைகளினால், மனதிடம் சிக்கிக் கொண்டு,
ஆட்டங்கள் பல ஆடி, முடிவில் தான் வந்த இந்தப்
பிறவியின் நோக்கம் புரியாமலேயே, இந்த மனித உடலின் மிகச் சிறப்பான ஆறாவது அறிவான புத்தியைப்
பயன் படுத்தாமலேயே, இந்த புனித உடலை விட்டு மரணத்தை தழுவி விடுகின்றான்.
இந்த கதையிலிருந்து
ஒன்றேயான பரமா(ஆ)ன்மாவையும், அதன் பிரதிபிம்பமான ஜீவனையும், ஒன்றென அறிய தடையாக இருப்பது
ஆசை என்பதை அறிய வேண்டும்.
அப்படிப்பட்ட
ஆசைகளை கண்ணிற்குத் தெரியாத சூக்ஷும மனமே தன் சம்ஸ்காரங்களாகச் சேர்த்து வைத்துக் கொண்டு,
அவைகளை பரு உடலின் வாயிலாக அனுபவிக்க விரும்பி, அதற்கேற்ற உடலை ஸ்தூலமாக எடுத்து அனுபவித்துக்
கொள்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக