சகஜ சமாதி
**************
முகவுரை
சஹஜ் என்றால் இயல்பான என்பது பொருளாகும். சமாதி என்பது நிசப்தமான ஆயினும் உயிரோட்டமுள்ள
விழிப்புணர்வு நிலை என்பதாகும்.
அதாவது, விழிப்பும், உறக்கமும், கனவுமற்ற ஓர் அறிவு நிலை.
எனவே, சகஜ சமாதி என்பது விழிப்புணர்வுடன் கூடிய, அறிவாற்றல் பொருந்திய ஆனந்த
அமைதி நிலை அனுபவம் ஆகும்.
இந்த நிலையில் அளவற்ற ஆற்றல் பெருகி, அறிவுத் திறன் கூடி, படைப்பாற்றல் எல்லையற்ற
அமைதி மற்றும் ஆனந்தம் உண்டாகின்றது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்.
''சாசுவத முக்தி நிலை ஈதென்று உணர்த்தியே சகச
நிலை தந்து வேறொன்றும் எண்ணாமலுள்ளபடி சுகமா யிருக்கவே ஏழையேற் கருள்செய்'' - என்கின்றார் தாயுமான சுவாமிகள்.
அதாவது, நிலையான முக்தி நிலை இதுதான் என்று எனக்கு உணர்த்தி, அதில் எப்பொழுதும்
இயல்பாக இருக்கின்ற நிலை தந்து, வேறு ஒன்றையும் எண்ணாமல் இருக்குப்படி ஆனந்தமாக இருக்கவே
அருள் செய்வாய் என்று பாடுகின்றார்.
அப்படிப்பட்ட சகஜ சமாதி பயில்வது எவ்வாறு?
''தண்ணீரிலிருந்து துள்ளி நிலத்தில் விழுந்து
துடித்துக் கொண்டிருக்கும் மீனை எடுத்து மறுபடியும் தண்ணீரிலேயே விட்டு விட்டால் அது
அடையும் அதன் இயல்பு நிலையே சகஜ நிலை'' என்கின்றார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
நீருக்குள் பிறந்து, நீரிலேயே வாழ்ந்து முடியக்
கூடியது மீன். அதன் ஆனந்தம் நீருக்குள்தான் இருக்கிறது. நீருக்குள் இங்குமங்கும் நீந்தி
விளையாடி, உணவைத் தேடி உண்டு உயிர் வாழக் கூடியது மீன். மீனுக்கு நீர்தான் உலகம். நீரை
விட்டு மீனைப் பிரிப்பது என்பது அதைக் கொல்வதாகும்.
இவ்வாறு, ஒவ்வொரு ஜீவனும் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ள கொடுக்கப்பட்ட உடலினைக் கொண்டு முயற்சிக்கும் இயல்புதான் சகஜம் எனப்படும்.
இதில், ஓரறிவு ஜீவர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன்
வரை அதனதன் இயல்பு நிலையில் இருக்க விரும்பும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக