இந்த மேலே உள்ள லின்கினை அழுத்தி பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.!
மனமும், சுய அறிவும்!
==================
இருப்பது ஒன்றே எனும்போது, எண்ணங்கள் எவருக்கு உண்டாகிறது....!
அதாவது, *மனம் என்பது
எங்கிருந்து உதிக்கிறது....?*
இருப்பது ஒன்று என்றால், அதற்கு வேறாக மனம் என்ற மற்றொன்று இருக்க முடியுமா....!?
அப்படி மனம் என்ற மற்றொன்று தனக்கு வேறாக உள்ளது என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமே, அந்த மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும், அதன் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும், அதனால், மனம் கடந்த மனோலயம் உள்ளது என்றும், மனதை மயக்கும் மற்ற பல பயிற்சிகளை பற்றிக் கொள்கின்றனர்.
ஒரு மீனுக்கு நான் தண்ணீரில்தான் இருக்கிறோம் என்பதை என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது. அத்துடன் அதற்கு வேறாக தண்ணீர் உள்ளது, அதை அருந்த வேண்டும் என்ற தாகமும் அதற்குக் கிடையாது.
ஆனால், அறிவினால் மேம்பட்ட மனிதன் தன் சுய அறிவை தன்னில் உணரத் தொடங்குவதினால், உண்டாகும் தாகம், தன்னை அறிய தனக்கு வேறாக வெளியே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களாக உள்ள புற அறிவை, சுய அறிவென்று எண்ணிக்கொள்கிறான்.
அறியாமையினால், அந்த சுய அறிவாகவே “நான் இருக்கிறேன்” என்பதை அறியாமல், அதை தனக்கு வேறாக வெளியே அறிய முயற்சிக்கிறான்.
அதாவது, ஒரு மீன் ‘தான் தண்ணீரில் இருப்பதை’ அறியாமல், தனக்கு தண்ணீரைக் காட்டிக் கொடுங்கள் என்பது போன்று இவன் முயற்சிக்கிறான்.
அதே சமயம், அவனிடம் உள்ள அந்த அதீத சுய அறிவு, தன்னை தனக்கு அறிவிக்க ஆவல் கொண்டு, தன் அறிவின் வெளிப்பாடாக வெளியே பலவற்றைப் படைத்துக் கொள்கிறது.
அதுவே சாஸ்திரம், சத்குரு போன்றவைகள் எல்லாமே!...