வெள்ளி, 30 ஜூன், 2023
புதன், 28 ஜூன், 2023
கைவல்ய நவநீதம் சந்தேகம் தெளிதல் படலம் [பாடல்கள் 63 - 70]
பூம வித்யா
===========
நாரதர் சனத்குமாரர் என்கின்ற குருவை அடைந்து, “பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்”என்று வேண்டிக்கேட்டார். சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாய் என்று எனக்குச் சொல், நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உனக்கு உபதேசிக்கிறேன்”என்று கூறினார்.
நாரதர் அவருக்குத் தெரிந்த்தையெல்லாம் கூறத்தொடங்கினார். எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம், நீதிசாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம் மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கும் தெரிந்தவன். இவைகளெல்லாம் தெரியும் என்று கூறிமுடித்தார்.
அத்துடன், இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன். ஆனால், ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற உயர் ஞானிகளின் மூலமாக ஆத்மாவை அறிந்தவன் எல்லாத் துயரங்களையும் வென்றவன் ஆகிறான். நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன்.
என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக! என்று நாரதர் வேண்டினார்.
சனத்குமாரரும் கூறத்தொடங்கினார்,“நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயோ அவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான் ஆகும்”.
ஆத்ம ஸ்துதி – இந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற புற அறிவினால் எல்லா துயரங்களையும் நிரந்தரமாகப் போக்கி, ஆனந்தத்தைத் தர இயலாது என்று மனதார அறிய வேண்டும்.
இவ்வாறே, நாரதரின் மனநிலையும் இருந்தது. குருவிடம் செல்லும்போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும். ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.
திங்கள், 26 ஜூன், 2023
ஞாயிறு, 25 ஜூன், 2023
வெள்ளி, 23 ஜூன், 2023
புதன், 21 ஜூன், 2023
திங்கள், 19 ஜூன், 2023
ஞாயிறு, 18 ஜூன், 2023
யோகாரூடன் [ஆன்மாவில் நிலைப்பெற்றவன்]
வெள்ளி, 16 ஜூன், 2023
புதன், 14 ஜூன், 2023
திங்கள், 12 ஜூன், 2023
வெள்ளி, 9 ஜூன், 2023
புதன், 7 ஜூன், 2023
திங்கள், 5 ஜூன், 2023
புதிய பதிவுகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...