வியாழன், 13 ஜனவரி, 2022
திங்கள், 10 ஜனவரி, 2022
மனமும்! குணமும்!
மனமும் குணமும்!
=================
மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள் நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா? அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா? எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது.
அத்தகைய மனதை அதன் சிக்கல்களில் இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஆன்மீகம் சில அடிப்படை அறிவை மனதிற்கு உண்டாக்க விரும்பி, அதற்கான பல்வேறு பூஜா விதானங்கள், மந்திர ஜெப, தபங்கள், ஆலய வழிபாடுகள், கடவுள்கள், என எல்லாவற்றையும் மனித மனம் பண்படுவதற்காக புகுத்தியது.
அவ்வாறு, மனதைச் சீர்படுத்திவிட முடியும் என்றால், மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். அதாவது, சிலப்பயிற்சிகள் மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், அலைபாயும் மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர்.
உண்மையில், மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும் கானல் நீர் போன்றது.
நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? என்றால், அதுவும் முடியாது.
இதுதான் மாயையின் மகத்தான விளையாட்டு...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...