சனி, 11 டிசம்பர், 2021
ப்ரஹ்மம் - மாயை
வெள்ளி, 10 டிசம்பர், 2021
திருக் - திருஷ்ய விவேகம்!
புத்தகம் 👈
திருக் - திருஷ்ய விவேகம்!
கயிற்றை பாம்பு என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற அறியாமை அகன்றால், அது பாம்பு அல்ல கயிறுதான் என்று உணருவதுபோல, மாயை என்பதை அறிந்தால் ப்ரஹ்மமே நித்தியம், அதுவே சத்தியம் என்பதையும், அந்த “ப்ரஹ்மமே நான்” என்பதையும் உணரலாம் என்பதே தத்துவ தரிசனம்.
ஆக, பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும், விழிப்புணர்வும் அவசியம். அவ்வாறே, இந்த உலகமாகத் தெரியும் ப்ரஹ்மத்தை உணர “ஞானம்” அவசியம். அந்த ஞானத்தின் மூலம் நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம்.
சரி!, இந்த மாயை எப்படி வந்தது? எப்போது வந்தது? ஏன் வந்தது?
இந்த மாயை என்பது பற்றிப் பலரும் பலவிதமாகக் கூறுவதற்குக் காரணம், அவர்கள் எல்லோருமே பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் எடுத்துக் கொள்கின்றனர்.
மித்யா அல்லது மாயை என்பது அறியாமை என்றும், நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம் என்றும், அந்த மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்றும், மேலும், அந்த மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பது போல, எல்லாமே ஏற்றி எண்ணங்களாக உள்ளன.
இந்த குழப்பம் மற்றும் ஏற்றிவைக்கப்பட்ட எண்ணங்கள் மூலம் இந்த மாயையைக் கண்டு மனம் மயங்குகின்றனர், அத்துடன் அந்த மாயைக் கண்டு அஞ்சுகின்றனர்.
ஆனால், அரிதான உண்மை ஒன்று உண்டு.
அது, அந்த மாயையே ப்ரஹ்மத்தை அறிவதற்கான திறவுகோல் என்றால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா...?
ஆம்! அதைப் பற்றி அறிய ஆவல் உண்டாகுமானால், இந்த நூலைப் படித்துப் ப்யன் பெறலாம்.
நன்றி! 👀
திங்கள், 29 நவம்பர், 2021
மனமும்! சுய அறிவும்!
இந்த மேலே உள்ள லின்கினை அழுத்தி பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.!
மனமும், சுய அறிவும்!
==================
இருப்பது ஒன்றே எனும்போது, எண்ணங்கள் எவருக்கு உண்டாகிறது....!
அதாவது, *மனம் என்பது
எங்கிருந்து உதிக்கிறது....?*
இருப்பது ஒன்று என்றால், அதற்கு வேறாக மனம் என்ற மற்றொன்று இருக்க முடியுமா....!?
அப்படி மனம் என்ற மற்றொன்று தனக்கு வேறாக உள்ளது என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமே, அந்த மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும், அதன் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும், அதனால், மனம் கடந்த மனோலயம் உள்ளது என்றும், மனதை மயக்கும் மற்ற பல பயிற்சிகளை பற்றிக் கொள்கின்றனர்.
ஒரு மீனுக்கு நான் தண்ணீரில்தான் இருக்கிறோம் என்பதை என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது. அத்துடன் அதற்கு வேறாக தண்ணீர் உள்ளது, அதை அருந்த வேண்டும் என்ற தாகமும் அதற்குக் கிடையாது.
ஆனால், அறிவினால் மேம்பட்ட மனிதன் தன் சுய அறிவை தன்னில் உணரத் தொடங்குவதினால், உண்டாகும் தாகம், தன்னை அறிய தனக்கு வேறாக வெளியே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களாக உள்ள புற அறிவை, சுய அறிவென்று எண்ணிக்கொள்கிறான்.
அறியாமையினால், அந்த சுய அறிவாகவே “நான் இருக்கிறேன்” என்பதை அறியாமல், அதை தனக்கு வேறாக வெளியே அறிய முயற்சிக்கிறான்.
அதாவது, ஒரு மீன் ‘தான் தண்ணீரில் இருப்பதை’ அறியாமல், தனக்கு தண்ணீரைக் காட்டிக் கொடுங்கள் என்பது போன்று இவன் முயற்சிக்கிறான்.
அதே சமயம், அவனிடம் உள்ள அந்த அதீத சுய அறிவு, தன்னை தனக்கு அறிவிக்க ஆவல் கொண்டு, தன் அறிவின் வெளிப்பாடாக வெளியே பலவற்றைப் படைத்துக் கொள்கிறது.
அதுவே சாஸ்திரம், சத்குரு போன்றவைகள் எல்லாமே!...
புதன், 24 நவம்பர், 2021
கடவுள் துகள்
கடவுள் துகள்!
===========
இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நம்முடைய மகான் திருமூலர் அன்றே கூறிவிட்டார்.
ஹிக்ஸ் போசோன் சொல்லும் அந்த கடவுள் துகள் எப்படி இருக்கும்?...
ஆகவே, அணுவுக்குள் அணுவானவனை, உங்கள் உயிருக்கு உயிரானவனை (சீவனை) சிவம் என்று அறிவதில் ஏன் தயக்கம்?.... அத்துடன், அணுக்கூட்டங்களின் தொகுப்பாகிய இந்த உடலை ஆளுகின்ற அந்த அறிவை, ஆன்மாவை, உயிரைப்பற்றி உரைக்கும் உன்னத வேத வாக்கியத்தை உணர்வதில் என்ன உறக்கம்?. ஆகவே, “அதுவாகவே நான் இருக்கிறேன்” என்று கூறுவதில் என்ன மயக்கம்!...?
ஆகவே, உன்னுடைய உணர்வாகிய உயிரே உண்மையில் சிவம்…! என்று அனுபவமாக உன்னால் உணர்ந்துக் கொள்ளலாமே தவிர, அதை உனக்கு வேறாக ஆலயங்களில் தேடி அலைவதினால், ஒரு நாளும் உன்னுடைய அனுபவமாக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேடிக் கண்டுகொண்டேன் -
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
வெள்ளி, 12 நவம்பர், 2021
சாதன சதுஷ்டயம்
சாதன சதுஷ்டயம்
“சாதன சதுஷ்டயம்” என்ற நான்கு சாதனங்களை
விவேகம்,
வைராக்கியம், சமாதி சட்க சம்பத்தி, முமுக்ஷுத்துவம் என்று அழைக்கப்படுகிறது. இதனை “சாதன சதுஷ்டய சம்பத்தி” என்றும் அழைக்கலாம்.
திங்கள், 27 செப்டம்பர், 2021
பேருணர்வும்! உள்ளுணர்வும்!
வியாழன், 23 செப்டம்பர், 2021
நிர்வாண சடகம்
புதிய பதிவுகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...

